பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


புராணங்களிலும் அதே கோநகரங்களைச் சார்த்தி அவை, வெறும் சாதி சமய அடிப்படையில் மட்டும் கூறப்பட்டதற்கும் உள்ள வேறுபாடு நோக்கத்தக்கது. காஞ்சி, உறையூர், வஞ்சி போன்ற பிற கோநகரங்களிலும் இதே சமுதாய அமைப்பு முறைதான் நிலவியிருந்திருக்கிறது.

சில நகர்கள் தொழில் முறைப்படி சமுதாயக் குடியிருப் புக்களைக் கொண்டிருந்திருக்கின்றன. வேறு சில நால் வருண முறைப்படி கொண்டிருந்திருக்கின்றன.

பூம்புகார், மதுரை போன்ற நகரங்கள் வீதிகளின் அமைப்பு முறையிலேயே அங்கங்கே குடியிருந்த சமுதாயங்களின் இயைபு பொருந்தும்படி இருந்துள்ளன.8 பால் வேறு தெரிந்த நால் வேறு வகைத் தெரு9 எனவும் மதுரையில் சார்த்திக் கூறப்படுகிறது.

பூம்புகாரில் நாளங்காடியும் பல மன்றங்களும் வீதிகளைத் தவிர மக்கள் கூடும் சமுதாயப் பொது இடங்களாக (Community Center or Public Places) வாய்த்திருக்கின்றன.

இவ்வாறு பழந்தமிழர் நகரங்களில் சமுதாயப் பொருந்துமுறை நகரமைப்புக்கு இயைந்து அழகுற வாய்த்திருந்துள்ளமையை அறிகிறோம். -

எல்லாத் தமிழ் நகரங்களிலும் பெரும்பாலும் இதில் ஒரே வகைமை (Pattern) காணப்படுவது போற்றற்குரியதாகும்.

இனி இவ்வாய்வினின்றும் புலனாகும் செய்திகளை அடுத்துக் காணலாம்.

♫♫