பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

33

லும் கட்டப்பட்ட சுவருடைய கோட்டையைப் பங்க துர்க்கம் என்றும் இயற்கையாகவே அமைந்த அரணு டைய கோட்டையைத் தெய்வத் துர்க்கம் என்றும் ஒரே பொட்டலாக அமைந்த கோட்டையை ரிண துர்க்கம்’ என்றும் நூல்களில் வகைப்படுத்தியுள்ளனர்.

இந்த வகையான ரிண்துர்க்கத்தில் மரமும், நீரும் இல்லாத வறண்ட சூழ்நிலையே பிறர் அண்ட முடியாத அரணாகவும், பாதுகாப்பாகவும் அமைந்து விடுகிறது.

சில இடங்களில் மலைகளும் காடுகளும் சேர்ந்தே பாதுகாப்பாய் அடுத்தடுத்து அமைகிற கோட்டைக்கு ‘மிச்ரதுர்க்கம்’ என்று பெயர்.

தமிழ்நாட்டு மரபுவழிப்பட்ட சிற்ப நூல்களில் எல்லாம் கோட்டைகளை அமைக்கும் முறைகளும் விரிவான விளக்கங்களும் பாதுகாப்பிற்குரிய இரகசியப் பாதைகளும் இரகசிய அறைகளும் அமைக்கும் முறைகளும், படைகள் தங்கும் இடங்களும் தேவையான வசதிகளை எங்கெங்கு எவ்வெவ்வாறு அமைப்பது என்ற விவரங்களும் விளக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளன.

வீடுகள் (Domestic Buildings)

தனிமனிதர் விடுகள் பற்றி இலக்கியங்களிலிருந்து அறிய முடிந்தவற்றையும் மனையடி சாத்திரம் முதலிய நூல்களில் இருந்து அறிய முடிந்தவற்றையும் தவிர அதிமாக எதுவும் அறிய இயலவில்லை.

பழந்தமிழர் 'கட்டடக் கலை' என்றாலே பெரும்பாலும் கோயில்களின் கட்டடக் கலையைத்தான் குறிக்கிறது எனலாம். அடுத்து அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகளைப் பற்றியோ, செல்வந்தர்கள் வாழ்ந்த மாடமாளிகைகள் பற்றியோ ஓரளவே அறிய முடிகிறது.