பக்கம்:பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழந் தமிழர் நாகரிகம்
அல்லது
தொல்காப்பியப்
பொருளதிகாரக் கருத்து.

தொல்காப்பியமே இப்போதுள்ள எத் தமிழ் நூலுக்கு முற்பட்ட முழுத்தமிழ் நூலென்பது தமிழ் மாணவர் யாவரும் நன்கறிந்த தாகும். அந்நூற் பொருள் திகாரமானது பண்டைத் தமிழர் பழக்க வழக்கங்களையும், நூன் முறைகளையும், பிற சிறப்புக் களையும் ஆய்ந்தறிதற்குப் பேருதவி புரியும் பெற்றி வாய்ந்ததாகலின், அதன்கட்போந்த கருத்துக்களை அறிந்து கொள்ளுதல் தமிழ் கற்பார் கடமையாகும். அவைகள் எளிதின் விளங்குதற்பொருட்டு இவ் வுரை நடை நூல் இயற்றப்படுகின்றது.

தொல்காப்பியமானது குமரியாறு தமிழ் நாட்டின் தென்னெல்லையாக விளங்கிய காலத்தே தோன்றியது. 'குமரித் தீம்புனல்' என்பதைக் காக்கை பாடினியார் எல்லையாகக் குறித்தமை காண்க. குமரியாறு கடல் கொள்ளப்பட்ட பின் கடைச்சங்கம் நிறுவப்பட்டது. கடைச்சங்கத் தொடக்கமும், பாரத காலமு மொன்றெனலாம். பாரதப்போர் நடந்தது கி.மு. 1200-க்கு முன்னன்றிப் பின்னில்லை. அதற்கு முன் இராமாயணப் போர் நிகழ்ந்தது. வால்மீக ராமாயணத்துள், இடைச்சங்கமிருந்த கபாடபுரம் குறிக்கப்பட்டிருத்தல் முதலிய பல காரணங்களால், இடைச்சங்க காலமும் இராமாயண காலமுமொத்துள்ளன. இடைச்சங்க காலம், கி.மு.2000 க்கு முற்-