பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

91



கருத்து, ‘சால்பினைச் சால்பு அறுக்குமாறு’ என்பது LմէՔ மொழி. - - - 185

186. பகையைக் காலமறிந்து வெல்லுதல்

போரின்கண்வலியபடைத்துணை உடைய பகைவர்களை இகழ்ந்து, அந்த வலிமையில்லாதவர்கள் எதிர்த்து நிற்பது அவருக்கேதுன்பந்தருவதாகும்.அதனால், அப்பகைவரை விட்டு நெடுந்தொலைவிற்கு ஓடிப்போய்,என்ன சூழ்ச்சிகளைச்செய்தா' லும் உயிர் பிழைத்துக் கொள்க. சாவாதிருப்பவன், படைத் துணை பெற்று என்றாவது அந்த்ப் பகைவனை வென்று, தன் முன்கையிலே கடகமும் அணிந்து கொள்ளக்கூடும்.

இகலின் வலியாரை எள்ளி எளியார் இகலின் எதிர்நிற்றல் ஏதல்-அகலப்போய் என்செய்தே யாயினும் உய்ந்தீக, சாவாதான்

முன்கை வனையுந் தொடும்.

பகை பெரிதானால் அதனை எதிர்த்து மோதி அழியாது, தப்பிச் சென்று தக்க துணையுடன் வந்து வெல்வதே சிறப்பு என்பது கருத்து.'சாவாதான் முன்கை வனையுந் தொடும்’ என்பது பழமொழி, வனை வீரர்கள் அணியும் கடகம். தொடுதல் - அணிதல், - 186 187. தேசத்துரோகி என்ன ஆவானோ?

மை தீற்றப்பெற்று அமர்த்திருக்கும் கண்களையும், மாட்சி மையுடைய அணிகளையும் உடையவளே! அடர்ந்து எழுந்த போர்க்களத்தினிடத்தே பகைவர்களின் வாயினின்றும் போந்த பொய்யான உரைகளைக்கேட்டு அதனால் கீழறுக்கப் பட்டுத் திரிபவர்களுக்கு என்னதான் வீரமோ? அறிவு நிறைந்தவர்கள், பிறர் கைப்பொருளை உண்டவரானாலும் கூட எப்போதும் உண்மையையே பேசுவார்கள்.

மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப் பொய்கொண்டன்றபோய்த் திரிபவர்க்கு என்கொலோ? மையுண்டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர் . கையுண்டும் கூறுவர் மெய்.

அறைபோதல்-இலஞ்சம் வாங்கிப்பகைவரோடுசேர்ந்து கொள்ளுதல். அறிவுடையார் அப்படித் துரோகம் செய்ய மாட்டார் என்பது கருத்து.தேசத் துரோகிகளின் இழிந்த பண்பு கூறப்பட்டது."சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய் என்பது

பழமொழி, - - - - 187