பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

93



பகைவர்களைத் தந்திரமாகத் தூண்டிவிட்டு, ஒரு நயமான தன்மையிலே அதற்கேற்ற சினத்தையும் அவர்களுக்குக் கொடுத்து, அவர்களை முதலிலே பகைவனுடன் மோதச் செய்து, அவனைத் தன் கைக்கு எளிதாக வீழுமாறு செய்து கொள்க. அப்படிச் செய்வதே, பெரிய குரங்கு, முதலிலேயே சிறிய குரங்கின் கையை விட்டுத் துழாவிச் சூடறிந்து கொள்ளுதலைப் போன்ற அறிவுள்ள செயல் ஆகும். * * இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே அயற்பகை தூண்டி விடுத்தோர்.--நயத்தால் கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே சிறுகுரங்கின் கையாற் றுழா. -

பகைவரை முதலில் தான் வெல்ல நினையாது, பிறபிற பகைகளைத் தூண்டிவிட்டு நலியச் செய்து பின் எளிதாக வெல்வதே அறிவுடைமை என்பது கருத்து. சிறுகுரங்கின் கையாற்றுழா என்பது பழமொழி 190 191. இலாபமான செயல் செய்பவரே அனைவரும்

வெற்றியுடைய பறவையான கருடன்மீது ஊர்ந்து வருபவ னும், உலகம் முழுவதையும் தாவி அளந்தவனுமான், அண்ண லான திருமாலேயானாலும், தனக்கு ஊதியமுடைய தான ஒன்றைச் செய்யாதவர்கள் இல்லை. ஆகையால், சுற்றத்தார் நட்பி னர் என்னவெல்லாம் கருதிச் சென்று வரும் காலத்தினும்கூட, அவர் மறைத்துச் செய்யுங் காரியங்களைப் பற்றித் தெரிவதற்கு அறிவுடையோர் முற்படமாட்டார்கள். சுற்றத்தார் நட்டார் எனச்சென்று ஒருவரை அற்றத்தால் தேறார் அறிவுடையார்-கொற்றப்புள் ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும் சீர்ந்தது செய்யாதார் இல்.

பிறர் இரகசியங்களை அறிந்து கொள்வதிலே அறிவுடை யோர் முயல்வதில்லை என்பது கருத்து.'சீர்ந்தது செய்யாதார் இல்’ என்பது பழமொழி. சீர்ந்தது. சிறப்பாக அமைவது. 191 192. பொன்மேல் மணி போன்றது!

மலைப்புறங்களிலே மூங்கிலோடு மூங்கில்கள் உரசிக் கொண்டிருக்கின்ற மலைநாடனே சிறந்தனவாகிய இன்பங் களை அனுபவித்து வாழும் செல்வச் செழுமை உடையவர்கள், அறஞ் செய்து பிற உயிர்களினிடத்து அருள் உடையவராகவும்