பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பழமொழி நானூறு மூலமும் உரையும்



ஆதல்,பொற்சுமையோடு அதன்மேல் மணிகளையும் வைத்துக் கொண்டுசெல்வதுபோன்றதாகும். -

சிறந்த நுகர்ந்தொழுகும் செல்வம் உடையார் அறஞ்செய்து அருளுடையர் ஆதல்--பிறங்கல் அமையோடு வேய்கலம் வெற்ப! அதுவே சுமையொடு மேல்வைப்பா மாறு. செல்வர்கள், தாம் இன்புறுவதுடன், அறமும் அருளும் உடையவராகவும் விளங்குதல் சிறப்புடையதாகும்."சுமையொடு மேல்வைப்பாமாறு’ என்பது பழமொழி. - 192 193. புதைத்து வைக்கும் செல்வம் -

பொருள்களைஈயாது மறைத்துவைக்கும் இயல்புஉடைய வர்கள்,சேர்த்து வைத்த செல்வம்,பகைவரைக்கடிதலையுடைய மன்னர்களுக்கே பயன்படுவதாகும்.அல்லாமல்,அப்படிவைத்த வர்களுக்கு இறுதிக் காலத்திற்கும் பயன்படாதேதான் போகும். அங்ங்னமில்லாமல், மிகவும் துன்பம் மிகுந்தவர்களுக்கு உதவும் படியாக அவன் ஒருபொருளைக் கொடுத்தால், பாலைநிலத்தி டையிலே பெய்த மழைபோல, ஒருபோதும் நடைபெறாத தேயாகும். -

கரப்புடையார் வைத்த கடையும் உதவா துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால் நிரப்பிடும்பை மிக்கார்க்கு உதவஒன் lதல் சுரத்திடைப் பெய்த பெயல்.

புதைத்து வைத்த பணம் அவனுடைய வழியினர்க்கும் உதவாமல், இறுதியில் எவரோ எப்போதோ தேடி எடுக்க அரசுக்குச் சொந்தமாய்விடும் என்று கொள்க. சுரத்திடைப் பெய்த பெயல்’ என்பது பழமொழி, கரப்பு - ஒளித்து வைத்தல் - 193 194. இளமையிலேயே கற்க வேண்டும - - வழியை மிகவும் கடந்துபோக விட்டுவிட்டுப் பின், பின் தொடர்ந்து சென்று வரிப்பணம் வாங்கியவர் எவரும் இல்லை. ஒடத்தைச் செலுத்திக் கரையிலே கொண்டு விட்டபின் முறை யான கூலி பெற்றவரும் எவருமில்லை. அவைபோலக் கற்கத் தகுதியான இளமைப் பருவத்திலே கற்காத ஒருவன், முதுமைக் கண் கல்வியைப் போற்றுபவனாவான் என்பதும் பொருந்தாத தேயாகும். -