பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுட்களையும் வரிசைப்படுத்திக்கொண்டு,இந்தப்பதிப்பைத் தெளிவுரையுடன் நான் அமைத்திருக்கின்றேன்.

பழமொழிகளை உளத்தில் பதிக்கவும், மீண்டும் மீண்டும் நினைக்கவும், அவை அமைந்த செய்யுட்களை நினைவுபடுத்திப் பயன்பெறவும், இந்தப் புதிய அமைப்பு உதவும் என்று நம்புகின்றேன்.

ஒரே செய்யுளில் இரண்டு பழமொழிகள் அமைந்து விளங்கும்போது முதலில் வருகின்ற பழமொழியைத் தழுவிய செய்யுளை வரிசைப்படுத்தியுள்ளேன். அச்செய்யுட்கள்,

51. இல்லை அட்டாரை ஒட்டாக்கலம்- - தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை

57. இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை 146. கனா முந்துறாத வினை இல்லை

வினர் முந்துறாத உரை இல்லை 194. சுரம் போக்கி உலகு கொண்டார் இல்லை மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை 313. புலிமுன்னர்ப் புல்வாய்க்குப் போக்கு இல்லை

வளிமுன்னர் வைப்பாரம் இல்லை

என்பனவாகும். g இந்தப் புதிய வரிசைப்படுத்தல் தமிழ் அன்பர்களால் வரவேற்கப்பெறும் என்று நம்புகின்றேன். இதன் முன்னைய பதிப்புக்களும் தமிழுலகத்தால்வரவேற்கப்பெற்றிருப்பதும் என் நம்பிக்கைக்குச்சான்றாகவிளங்குகின்றது. -

பதினெண்கணக்கு நூல்களுள் மிகவும் செல்வாக்குப் பெற்றதாக விளங்குவது திருக்குறள் ஆகும். திருக்குறளுக்கு அடுத்தபடியாக நாலடியார் பலராலும் விரும்பிக் கற்கப் பெறுகின்றது. நாலடியாரைப் போலவே பழமொழி நானூறும் விரும்பிக்கற்கப்பெறவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும். அந்த விருப்பமே இந்நூலை அமைப்பதற்கு என்னைத் துண்டியது என்றும் கூறலாம்.

நாலடியாரையும் இந்நூலையும் கற்றறிந்தபின் திருக்குறளைக் கற்கும்போது, திருக்குறளின் பொருளானது