பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

97



குற்றமற்ற செங்கோலனான சினமுடைய வேந்தனது தீமையைக் குற்றமற்ற பக்கத்திலுள்ள உள்படுகருமத்தலைவர்களே ஏற்றுக் கொள்வார்கள். செய்தவனை ஒத்திராத பாவை என்பதோ உலகத்தில் எதுவும் இல்லை.

செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை பயிரறு பக்கத்தார் கொள்வர்-துகிர்புரையும் செவ்வாய் முறுவல்நற் சின்மொழியாய் செய்தானை ஒவ்வாத பாலையோ இல். செய்பவன் தன் கருத்திற்கு ஒத்திராத சித்திரம் எழுது வதில்லை. அரசனைச் சூழ்ந்திருப்பவரின் தொடர்பின்றி அவன் தீமை செய்வதும் இயலாது. அதனால், பழி அவரையே சாரும் என்பது கருத்து.'செய்தானை ஒவ்வாத பாலையோ இல் என் பதுபழமொழி. - 199 200. துரோகிகள் பேச்சுக்கு வருந்த வேண்டாம்

மையினை மிகுதியாக உண்ட கண்களையும் மாட்சிமைப் பட்டகலன்களையும் உடையவளே!பகைவர்கொடுத்தவற்றைக் கையார வாங்கி உண்டதனால், அவர் ஏவியதைச் செய்யாத விடத்துக் காய்வார்களே என்பதன் காரணமாகப், பொருளற்ற அற்பர்கள், தம்மைப் பொய்மை யாகக் கூறிப் பழித்தால், செய்யாத பழிவந்து அடைவதில்லை; என்றால், அதற்காக ஏன் வருத்தப்படவேண்டும்? -

கையார உண்டமையால் காய்வார் பொருட்டாகப் பொய்யாகத் தம்மைப் பொருளல்லார் கூறுபவேல் மையார உடைகண் மாணிழாய்! என்பரிவ செய்யாத எய்தா எனில்? பகைவர் தூண்டுதலால் இவர் பேசித் திரிவதனால் அதனையொரு பொருட்டாகக் கருதுதல் வேண்டாமென்பது கருத்து.'செய்யாத எய்தா எனில் என்பது பழமொழி. 200 201. கொடுங்கோலோனும் கூற்றமும்

முல்ல்ை அரும்புகளைப் போல விளங்கும் பல்வரிசை யினை உடையவளே கூற்றமானது வந்து உயிரினைக் கொள்ளு கின்றபொழுது, கொள்ளப்படுபவரின் குறிப்பினை அறிந்து, அவர் தனக்குச்சொல்லப்போகும் மாற்றங்களைக்கேட்டுத்தான் கொள்வதா விடுவதா என்று ஆராய்வதில்லை. அது போல

அரசனானவன் குடிகளை விரைந்து துன்புறுத்தி அடிமையாகக் கொண்டால் செய்வதற்கு என்ன இருக்கிறது?

A