பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

101



ஒருநாள் பாலுண்ணக் கொடுத்தபொழுது அது பசுப்பாலி னின்றுமேய்ப்பு ஆட்டின்பால் என்று சொல்லி உண்ணாதவளா யிருந்தாள்.ஒருவர்தம் குலத்திற்குரிய குணத்தை எவ்வளவுதான் மறைக்கமுயன்றாலும் முடியாது; தம் குலத்தின் குணமே எப்பொழுதும் முற்படத் தோன்றி விடும். . .

காப்பான் மடமகள் காப்பான்கைப்பட்டிருந்தும் மேய்ப்பாட்ட தென்றுண்ணா ளாயினாள்- தீப்புகைபோல் மஞ்சாடு வெற்ப! மறைப்பினும் ஆகாதே தஞ்சாதி மிக்கு விடும். -

'ஒருவரது குலப்பண்பு தம்மையறியாதே தோன்றி அவரைக் காட்டிவிடும்' என்பது கருத்து. ‘தம்சாதி மறைப்பினும் ஆகாதே மிக்குவிடும் என்பது பழமொழிசாதி, குலம்.மேய்ப்பாடு-மேய்ச்சலுக்குச் சென்றுவரும் ஆடு, 208 209. ஏவிப் பணி கொள்க

கையினாலே தொட்ட அளவாலேயே வாடிப்போய் விடுகின்ற தன்மையுடைய மெல்லிய தளிரின் மேலாக நிற்பதா னாலுங்கூடப், பிறர் ஒருவர் தட்டிச்செலுத்தினால் அன்றி, உளி அதன்பால் இறங்கமாட்டாது. அதுபோலவே ஒருவரைத் தகுதியுடையவராகத் தெரிந்து, அவர்பால் பொறுப்பை ஒப்பித்துச் செயலைச் செய்யவைத்தாலும் அதன் பின்னரும் இடையறாமல் அவரை ஏவிச் செலுத்திக் கொண்டேயிருத்தல் வேண்டும்.

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும் முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால் தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லாது உளி. -

எவ்வளவுபொறுப்புடைய பணியாளராயினும், ബഖണ് எளிதான தொழிலிலே அவரைச்செலுத்துவதாயினும் அவரை யும் ஏவிக் கொண்டே இருக்க வேண்டும். தட்டாமல் செல் லாது உளி என்பது பழமொழி. 209 210. அரசர்களின் செங்கோன்மை - -

அழகிதாகக் கோற்றொழில் அமைந்துள்ள, ஒளியுடைய வளையல்களை அணிந்துள்ளவளே! சக்கரப் படையினையு டைய திருமாலேயர்னாலும். அவனும் செங்கோன்மையாள னாக அல்லாத இடத்து, அவனைச் சேர்ந்தவர்களும் அவனை

غبخ