பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

பழமொழி நானூறு மூலமும் உரையும்



மதியார்கள் இகழ்ச்சியாகவே பேசுவார்கள்.கொடுங்கோன்மை யுடைய தன்மையும் சிறிதள வேயாயினும் வேந்தர்கள்பால் இருக்கத்தான் வேண்டும். ஆயினும், அருளோடு செலுத்தும் தன்மையான பண்பே உண்மையாக அவர் களை உயர்த்தும் என்பதை அவர்கள் மறந்து விடவும் கூடாது.

அங்கோல் அவிர்தொடி ஆழியான் ஆயினும் செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால் வெங்கோன்மை வேந்தர்க்கண் வேண்டும் சிறிதெனினும் தண்கோல் எடுக்குமாம் மெய்.

"பகைவரிடத்துக்கொடியவனாக நடக்கும்வேந்தனும் தன் குடிமக்களிடத்தே மிகவும் அருளாளனாக நடக்க வேண்டும்’ என்பது கருத்து. "தண்கோல் எடுக்குமாம் மெய் என்பது பழமொழி. தண்கோல்-அருளாட்சி. 210 211. தத்தம் தன்மை மாறாது - -

உண்மையான சிறந்த தன்மைகளை உடையவராகி அந்தத் தம்முடைய பண்புகள் விரிந்து விளங்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவர்கள் சிலர், பொய்மையான இழிந்த தன்மை உடையவராகித் தாம் கருதிய பொருளினை வெற்றிகரமாக முடிப்பவர்கள் சிலர், இப்படிச் செயலிலே ஈடுபடுபவர்கள் எத்தன்மைகளை உடையவராயினும் ஆகட்டும்; அவரவர், தத்தம் தன்மை உடையவராக விளங்குதலே முதன்மையாகும்.

மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும் பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும் எந்நீர ராயினும் ஆக அவரவர் - தந்நீர ராதல் தலை. செயலை முடிப்பதற்காக ஒருவர் உண்மையாளராகவோ பொய்ம்மையாளராகவோ விளங்கினாலுங்கூட, அவர்களின் இயல்பான தன்மைகளே முனைப்பாக அங்கும் தலைநிற்கும் என்பது கருத்து.'தந்நீர ராதல் தலை’ என்பது பழமொழிதலை -முதன்ம்ை. - - 211 212. தமக்குத் தாமே துணை

'எந்தக் காரியத்தைச் செய்வதற்கும் எமக்குத் துணையாக விளங்குபவர்கள் சிலர் இருக்க வேண்டும் என்று எண்ணித் தமக்குத் துணையாக விளங்குபவர்களைக் கருதித் தாம் ஆராய்ந்து தேடிக்கொண்டே இருக்க வேண்டாம். பிறருக்குப்