பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

105


. .

விரும்புவர் சிலர். அவர், அறிவோடே அனைத்து உயிருக்கும் அருள்புரிந்து ஒழுக மாட் டார்கள். பிறவற்றின் உயிரைச் சிதைத்து ஊனைத்துய்த்து உண்டுவருவார்கள்.அவர்களுடைய நிலை மிகவும் பழியுடையதேயாகும்.

செறலிற் கொலைபுரிந்து சேணுவப்பார் ஆகி அறிவின் அருள்புரிந்து செல்லார்--பிறிதின் உயிர்செகுத்து ஊன்றுய்த் தொழுகுதல்; ஒம்பார் தயிர்சிதைத்து மற்றொன் றடல். உயிர்கள்பால் அருளுடையவராக நடந்து வருபவர் தாம் மறுமையிலே இன்பமடைவர். ஊன் விரும்பி உயிர்களைக் கொல்பவரும், மறுமை இன்பம் விரும்பி யாகபலி தேவபலி இடுவோரும் அதனை அடையமாட்டார். தயிர்சிதைத்து மற்றொன்றடல்’ என்பது பழமொழி. 216 217.போரிடைப் புகும் நண்பன் -

ஒருவன் உண்மையுணராது சினங்கொண்டு பிறனொரு வன் மீது போரிட எழுந்தால், அப்படி எழுந்த போரினுள் இருவரிடை யினும் நண்புடையவனான ஒருவன் புகுந்து அவரைச் சமா தானம் செய்யவும் முயலலாம். அவர்கள் அவனுடைய சொல்லைக் கேட்டால் நன்றாயிற்று.அஃதன்றிப் பெரிதான வெறுப்பி னாலே மீண்டும் போரிடத் தொடங்கு வாரானால், அது சமாதானம் செய்யப் புகுந்தவன் தலையினுள் புகுந்த குறுக்கண்ணியாகி அவனுக்கே ஆபத்தாகி விடும்.

ஒருவன் உணராது உடன்றெழுந்த போருள் இருவரிடை நட்பான் புக்கால்--பெரிய - வெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின் தலையுள், குறுக்கண்ணி யாகி விடும். - தன் நண்பரான இருவரின் பகைமையை நீக்க இடையில்ே புகும் நண்பனின் சொற்களை அவர்கள் கேளாவிட்டால், அந்த நண்பனின் முயற்சி பாழாவது மட்டுமன்று, அவன் இருவருக்குமே பகையாகவும் நேரலாம்."தலையுள் குறுக்கண்ணியாகி விடும்’ என்பது பழமொழி. குறுக்கண்ணி- சுருக்காங்கண்ணி. 217

218. பிறருக்குத் துன்பம் செய்தல்

புனங்களிலே விளங்கும்பொன்போன்ற மகரந்தங்களைச் சொரிந்து கொண்டிருக்கும் பூங்கொம்பைப் போன்ற அழகுத் தேமல்களை உடையவளே! நினக்குத் துன்பந் தருவதாக