பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

பழமொழி நானூறு மூலமும் உரையும்



இருப்பது பிறருக்கும் துன்பந்தருவதே என்பதை அறிவாயாக அதனால், செயலின் பயன் ஒன்றேனும் இல்லாமல், மன வேற்றுமை ஒன்றையே உள்ளத்திலே கொண்டு, அதனையே நினைத்து நினைத்துப் பிறர் துயரம், கொள்ளும் செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். -

வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு நினைத்துப் பிறர்பணிப்பச் செய்யாமை வேண்டும் புனப்பொன் அவிர்சுணங்கின் பூங்கொம்பர் அன்னாய்! தனக்கின்னா இன்னா பிறர்க்கு. 'தனக்குத் துன்பமாயிருக்கும் ஒன்று பிறருக்கும் துன்பமாகவேயிருக்கும் என்பதை உணரவேண்டும்; உணர்ந்து பிறர்க்குத் துன்பந்தரும் செயல்களைச் செய்தலைக் கைவிட வேண்டும் என்பது கருத்து. 'தனக்கின்னா இன்னா பிறர்க்கு” என்பது பழமொழி. - 218 219. பகையை நீக்குதல்

தனக்கு எதிராகத் தோன்றிய பகையினை, அது உண்டாகி இளையதாயிருக்கும் காலத்திலேயே விரைந்து களைந்துவிட வேண்டும்.அப்படிக் களைந்தால் அது முதிராது.மேலும், அந்தப் பகைவரின் நண்பர்களையெல்லாம், அவர்கள் மிகவும் விரும்பத்தக்க காரியங்களைச் செய்து, முழுக்கவும் பிரித்து விடுதலும் நல்லது. அப்படிப் பிரித்து அவரைத் தனியாக்கி விட்டால், அந்தப் பகை எதனையும் செய்யச் சக்தியற்றதாய் விடும். தனிமரம் காடாவது இல்லையல்லவா?

எதிர்த்த பகையை இளைதாய போழ்தே கதித்துக் களையின் முதிராதே; தீர்த்து நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாம் தீரத் தனிமரம் காடாதல் இல். - பகைவரை ஆரம்பத்திலேயே முடித்துவிடுவதுடன், அவரைச் சேர்ந்தவர்களையும் பிரித்துவிட்டால், அந்தப் பகை யால் எந்தத் தீமையும் நேராது. 'தனிமரம் காடாதல் இல் என்பது பழமொழி. தனிமரம் தோப்பாகாது’ என்பதும் இது போல்வதே. i. 219 220. ஆசையும் அழிவும்

அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும் விருந் தெதிர் கோடலும் என்பவை இல்லறத்தாருக்கு உரிய மூன்று கடமைகள். அந்த மூன்றுக்கும் உதவ முடியாதபடி வறுமை