பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

107



யுற்று, பசியின் தோற்றமும் உடையவராவர் சிலர். அது, அவர் முன்பிறப்பிலே ஒழுகிவந்த செல்வவளத்தை ஒட்டிவந்ததாகும். அப்பிறப்பிலே, பிறருக்கு உதவாது, தாம் மட்டுமே உடைதான அச்செயல் அவர்களைக்கும்பி என்னும் நரகத்திலும் கொண்டு தள்ளிவிடும். அதனால், தன் இச்சை என்று சொல்லப்படும் ஆசையானது, அம்பு போலத் தன் உள்ளத்தினுள்ளே புகுந்து தன்னை அழித்துவிடும் என்பதை ஒவ்வொருவரும் தெளிவாக உணர்வாராக. - -

கொண்டொழுகும் மூன்றற்கு உதவாப் பசித்தோற்றம் பண்டொழுகி வந்த வளமைத்தங்--குண்டது . கும்பியிலுந் திச்சென் றெறிதலால் தன்னாசை அம்பாயுள் புக்கு விடும். 'தன்னாசை அம்பாய் உள்புக்கு விடும்’ என்பது பழமொழி. அதனை நீக்குவது சிறப்பு என்பது கருத்து. 220 221. உபகாரத்துக்கு அபகாரம் -

தாமாகவே நாடிவந்து,நம்மவர் என்று உரிமை பாராட்டி, நல்லமுறையிலே உதவிசெய்து காப்பாற்றினவருக்கு, அவர்க்கு வேண்டாத பிறரோடு சேர்ந்து ஒருவர் கேடு செய்யநினைப்பது மிகவும் தவறாகும். ஒளியுடைய மணிகள் விளங்கும் நெடிய மலைத்தொடர்களுக்கு உரிய வெற்பனே! அதுதான், தான் ஏறியிருந்த கிளையினையே தனக்கு வரும் ஆபத்தைப்பற்றி நினையாமல், ஒருவன்வெட்டிவிடுவதுபோன்றதாகும்.

நாடி நமரென்று நன்குபுறந் தந்தாரைக் கேடு பிறரோடு சூழ்தல்--கிளர்மணி நீடுகல் வெற்ப! நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்து விடல்.

இருக்க உதவிய கிளையை வெட்டும் மூடன், அதன் அழிவோடு தானும் வீழ்ந்து சாவது போல, உபகாரம் செய்த வர்க்கு அபகாரம் செய்பவர் தாமும் அழிவர் என்பது கருத்து. “தாமிருந்த கோடு குறைத்து விடல்' என்பது பழமொழிகோடுமரக்கொம்பு, மரக்கிளை 221 222. தீயவரைத் தண்டித்தல் -

முடிவில்லாத உலகத்தின்கண் விளங்கவேண்டிய உறுதிப் பாடுகளான நல்லநெறிகளை மனத்திற் கொண்டு, நல்ல அற நெறிகளை மேற்கொள்ளாதவரையும், சான்றோர்கள்,அவர்களு டையவன்மையைச்சிதைத்து அடங்கச் செய்து,நல்லற நெறியை