பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

பழமொழி நானூறு மூலமும் உரையும்



அறிவுறுத்துதல் முறையாகும். மனம் மாறு பட்டு அழுது பாலுண்ண மறுக்கும் குழந்தையைத் தாய் மார்கள் வருத்திப் பாலூட்டுவதுபோன்ற சிறந்த செயலாகும்.அது

உலப்பில் உலகத்து உறுதியை நோக்கிக் குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல், மலைத்தழுது உண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப்பால் பெய்து விடல். குழந்தையின் நலங்கருதிய தாய், அதனை வருத்தியும் அதற்கு பாலூட்டுவதுபோல, நல்லோரும், தீயோரை வருத்தியேனும் நன் னெறிப் படுத்துதல் வேண்டும் என்பது கருத்து. 'தாயர் அலைத் துப்பால் பெய்து விடல்’ என்பது பழமொழி. அலைத்தல்-வருத்துதல்;அடித்தல். 222 223. சிலரிடம் அன்பு * *

இருவரும் தம்முள் ஒத்த தகுதியுடையவராக அமைந்து,

தம்முள பொருதலான குதினிடத்தே, பக்கத்திலே இருப்பவன் ஒருவன், அவர்களுள் ஒருவன் பக்கமாகப்பொருந்தி ஆதரித்துக் கொண்டிருப்பான், அதுவே உலக இயல்பு. இது போலவே, பிள்ளைகள் மிகுந்த சிறப்புடையவர்களாயினும் தாய்மார்க்கு அவர்கள்பால் விளங்கும் பாசம் வேறு வகையின தாகவே இருக்கும். -

ஒக்கும் வகையான் உடன்பொரும் சூதின்கண்

பக்கத் தொருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும்

மிக்க சிறப்பினராயினும் தாயர்க்கு

மக்களுள் பக்கமோ வேறு.

w

தாய்ப்பாசம் என்பது பிள்ளைகளின் சிறப்பு செல்வம் முதலிய தகுதிகளைப் பொறுத்து அமைவதன்று அது தாயுள் ளத்தின் தனித்த இயல்பால் அமைவது என்பது கருத்து. "தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு என்பது பழமொழி. பக்கம்-பட்சம் என்பதன் தமிழாக்கம்: பட்சம்பாசம். 223 224. உறவினர்பாற் செல்க

தானியங்கள் விளைகின்ற வயல்களினுள்ளே விளங்கும் நீர்ப்பூக்களை மிதித்தவாறு, நீர்ப்பறவைகள் ஆரவாரித்துக் கொண்டிருக்கும் பொய்கைகள் மிக்க நீர்வளமுடைய ஊரனே! தாய் மிதித்ததனால் குஞ்சுகள் ஒருபோதும் முடமாகிப் போய் விடுவதில்லை; ஆதலால், தம் மனம் வருந்துமாறு உரைத்து