பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

109



விட்டனர் என்றாலும், தமக்கு உறுதியானவைகளைத் தம் உறவினர்களிடத்திலேசென்று கேட்பதே நன்மையானதாகும்.

உளைய உரைத்து விடினும் உறுதி கிளைகள் வாய்க் கேட்பதே நன்றாம்--விளைவயலுள் பூமிதித்துப்புட்கலாம் பொய்கைப்புனலூர! தாய்மிதித்து ஆகா முடம். உறவினர் கடிந்தாலும் அதனால் பாதகமில்லை என்பது கருத்து. 'தாய்மிதித்து ஆகா முடம் என்பது பழமொழி: 'கோழி மிதித்துக் குஞ்சுக்குச் சேதமில்லை என இந்நாளிலே வழங்குவர். - - - 224

225. சிறியவரிடமும் உறவு

குடிப்பிறப்பினாலே மிகுதியும் சிறந்தவர்களான சிலர்தம் வறுமை காரணமாகக் குடிப்பிறப்பிலே மிகவும் தாழ்ந்தவர் களைச் சென்றடைந்து வாழ்கின்றார்கள். எமக்கு இச் செயல் மிகவும் இழிவைத் தருவதாகுமே! என்றும் எண்ணாதிருக்கி றார்கள்.அவர்கள் நிலைமை அடைமானம் வைத்த நிலம்போல ஒளி மழுங்கியதாகவே இருக்கும்.

இறப்ப எமக்கீ திழிவரவென்று எண்ணார், பிறப்பிற் சிறியாரைச் சென்று-பிறப்பினால் சாலவும் மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே . தால வடைக்கலமே போன்று.

உடையவனிடம் இருந்த நிலமே, அவன் அடைமானம் வைத்த காலத்து, அடைமானம் பெற்றவனிடம் சென்றதும், ஒளி குன்றிக்காணப்படுவதுபோலச்சான்றோரும் கீழோரை அடுத்து வாழத்தொடங்கியதும், தம் ஒளிகெடுவர் என்பது கருத்து'தால வடைக்கலமே போன்று’ என்பது பழமொழி. தாலம்-நிலம்; அடைக்கலம்-அடைமானம். 225 226. தலைமகனின் சிறப்பு

தன் இயல்பான ஒளியினின்றும் மாறுபட்டு வேறென்றே போலத் தோன்றும் ஒரு விளக்கத்தை உடையதாக விளங்கி னாலும்,நீரிலே படிந்து காணப்படும் மணியானது, அதனோடு ஒட்டாது, தான் என்றும் தன் சிறப்புடன் ஒப்பற்றதாகவே விளங்கும். அதுபோலத் தலைமகனுடைய பண்பினாலே விளங்கும் அவன் ஒளியானது தாற்றிப் போகப்பட்டதாயினுங் கூடநூறாயிரவருடைய பெருமைக்கு ஒப்பாகவே விளங்கும்.