பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

பழமொழி நானூறு மூலமும் உரையும்



கானட்டு நாறும் கதுப்பினாய் தீற்றாதோ நாய் நட்டல் நல்ல முயல்? - நாயும், தனக்கு வேண்டியவர்க்கு முயலை வேட்டையாடி வந்து உண்பிப்பதுபோல,யாவர் நட்பாயினும் அந்த அளவிலே பயன் தருவதாகவே இருக்கும். ஆகவே, யாவரையும் நட்பினராகக் கொள்ளுதலே சிறந்தது என்பது கருத்து. 'தீற்றாதோநாய் நட்டால் நல்ல முயல் என்பது பழமொழி.239 240. பல துளி பெருவெள்ளம்! - -

ஒருவருடைய பொருள் வருவாயானது சிறிதாகவே இருந் தாலும், நாள்தோறும் வந்து சேருமானால், நாளடைவிலே பெரும் அளவினதாகத் தொகுப்புண்டுபெருஞ்செல்வமாக ஆகி விளங்கும்.ஒருபடியே பலநட்சத்திரங்களும் சேர்ந்து ஒளிசெய்து நின்றால், உலகமெல்லாம் இருள்போக்கி விளக்கமுறச் செய்யும். மழைத்துளிகளும் நெருங்கி நின்று தொடர்ந்து வீழ்ந்தால் வெள்ளம் போல் நீர்ப்பெருக்கையும் தரும். அது போலவே, வருமானமும் என்க.

வருவாய் சிறிதெனினும் வைகலும் ஈண்டின் பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும்--ஒருவாறு ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும் துளியீண்டில் வெள்ளந் தரும். பலதுளிபெருவெள்ளமாவதுபோல சிறுசிறுவருவாயும் முறையே சேர்த்துவைக்கப் பெற்றால் பெருஞ்செல்வமாகும்’ எனச் சேமிப்பின் சிறப்புக் கூறப் பெற்றது. துளியீண்டில் வெள்ளந் தரும்’ என்பது பழமொழி. சிறுதுளி பெருவெள்ளம் என்பதும் நினைக்க . 240 241. துறவும் உடம்பும்

தன்னுடனே நட்புச் செய்தவரை வளமுடையவராக ஆக்கியும், தன்னுடனே பகைகொண்டவரை அழித்தும், கூர்மை யான பற்களையும், பட்டாடை சூழ்ந்திருக்கும் துடி போலும் இடையினையும் உடைய மகளிர்பாற் காதல் கொண்டும், உலகி யலை ஒட்டி வாழத் தொடங்கினவர்கள், இல்லற வாழ்விலே திளைத்திபின்னும், அதன் துன்பங்களை உணர்ந்து துறவாமலி ருந்தால், அவர்கள் உடல் எடுத்ததனால்தான் பெற்ற பயன்தான் என்னவோ? * * நட்டாரை யாக்கிப் பகைதணித்து வையெயிற்றுப் பட்டார் துடியிடை யார்ப்படர்ந்து-ஒட்டித்