பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

119



காஞ்சிரையை நட்டுவளர்ப்பது என்பது மிகவும் அறிவீனமான செயல் என்பதும் ஆம் 245 246. நன்மையே கருத வேண்டும்

சுருண்டுதழைத்ததும், ஐம்பகுதியாகமுடிப்பதுமான கூந்த லையுடையவளே! அப்பம் தின்பவர்கள், அதனைத்தம் கையிலே வாங்கி உட்கார்ந்துகொண்டு அதிலுள்ள தொளைகள் எவ்வள வென்று எண்ணிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதுபோல, 'உறுதியாக நிலைபெற்ற பண்பில்லாதவர்கள் எல்லாம் நேர்மை யுடையவர் அல்லர்’ என்று, அவர்கள் மனம் புண்படும்படியாக ஒரு சொல்லைச்சொல்லாது, அவரிடமும் பெற்றுக்கொள்ளக் கூடிய உறுதியான பயன்களை மட்டுமே பெற்றுக் கொண்டு இன்புறுக

நிலைஇய பண்பிலார் நேரல்லர் என்றொன்று உளைய உரையார் உறுதியே கொள்க; வளையொலி ஐம்பாலாய்! வாங்கி இருந்து தொளையெண்ணார் அப்பந்தின் பார்.

'வடையைத் தின்னச் சொன்னார்களா, தொளையை எண்ணச் சொன்னார்களா? எனவும் இது வழங்கும். எவரிட மும் உள்ள பயனுடைய பண்பைப் போற்றிக் கொள்ள வேண்டுமே யல்லாமல் குறைகளை எடுத்துக் கூறுவது முறையன்று என்பது கருத்து. தொளையெண்ணார் அப்பந்தின் பார் என்பது பழமொழி. 246 247. வெற்றியே சிறப்பாகும்

தம்முடைய தேனுண்ணும் விருப்பத்தினாலே வண்டுகள் பின் தொடர்கின்ற, ஒளியுடைய மலர்போன்ற கண்களை உடையவளே! தம் உரையைக் கேட்கும் தகுதி உடையவர்களை ஆராய்ந்து, சொல்லப்படும் பொருளினிடத்தே அவர்களுக்கு உள்ள விருப்பத்தையும் தெரிந்து கொண்டபின்னரே, அறிஞர், தாம் அவரிடத்தே சொல்லக்கருதியதைச் சொல்லத் தொடங்கு வார்கள். தாம் தோல்வியுற்றுப் போகக் கூடிய எதனையும் மேற்கொண்டு, அவையினிடத்தே சென்று, அறிவுடையோர் ஒரு போதும்பேசமாட்டார்கள்.

கேட்பாரை நாடிக் கிளக்கப்படும்பொருட்கண் வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர்-வேட்கையால் வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன கொண்டு புகாஅர் அவை.