பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

பழமொழி நானூறு மூலமும் உரையும்



256. வலியவரைப் பகைத்தல் |

குன்றுகளும் தேன் பொதிகளும் தம்முள் விரவிக் கலந்தனவாகத் தோன்றும் வெற்புக்கு உரியவனே பகைத்தால் தம்மை வென்று அழிக்கக்கூடிய வலிமை உடையவர்களை மனங்கொதிக்குமாறு செய்தல் கூடாது. அவர் சினங் கொள்வ தற்கான ஒரு காரியத்தோடு நிலைபெற்றுச் சிறியோர் பலப்பல செயல்களையும் செய்தனரானால், அது மிகவும் நன்மையோடு, சேர்ந்த ஒரு தன்மை உடையதே அன்று. t வென்றடு கிற்பாரை வெப்பித் தவர்காய்வது

ஒன்றொடு நின்று சிறியார் பலசெய்தல் குன்றொடு தேன்கலாம் வெற்ப! அதுபெரிதும் நன்றொடு வந்ததொன் றன்று. தம்மை அழிக்கும் வலிமையுடையவரெனத் தெரிந்தும் அறியாமையால், அவர்க்குச் சினமுண்டாகத் தக்கவற்றையே செய்பவர் கெடுவர் என்பது கருத்து. நன்றொடு வந்ததொன் றன்று’ என்பது பழமொழி.அச்செயல் அவருக்கு நன்மைதராது என்பதும் கேட்டையே தந்துவிடும் என்பதும் கருத்து. 256 . 257. தருமத்தை எப்போதும் செய்க

தாம் சாவதற்கு முன்பாகவே, பலவகைப்பட்ட நல்ல செயல்களை எவ்விதமானதொரு ஆராய்ச்சியும் செய்து காலங் கடத்தாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்யாதவர்கள், தமக்குச் சாவு நெருங்கியதெனக் காட்டும் நோய்வந்த காலத்திலே, பின்னைச் செல்லும் வழிக்கு உறுதியானவற்றைச் செய்ய நினைந்தாலும், அவர் கருத்துப் படி அறம் செய்பவரைக் காண இயலாமற் போவார்கள். நாயைக் கண்டால் கல்லைக் காணாதவாறு போன்றதே அவர் நிலையும் எனலாம்.

மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை, நாய்காணின் கற்கானா வாறு. - - இன்புற்று வாழ்ந்த பொழுது தருமஞ் செய்யாதவர் நோயுற்றுச்சாகப்போகும் காலத்திலே தம் பொருளைத் தருமம் செய்யச்சொன்னாலும், அதனைத் தமக்கு என எண்ணியிருக்கும் உரிமை யுடையார் செய்யமாட்டார் என்பதும், அவராலும்