பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

125



செய்யவியலாது என்பதும் கருத்தாகும். நாய் காணின் கற்கானா வாறு’ என்பது பழமொழி. 257 258. சொல்பவர் சொல்லையே கொள்க -

அருவிகள் தெளிவான ஒலியோடு வீழ்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் மலைநாடனே! பார்ப்பார்களும், நாயானது கெளவிக் கொண்டுவந்து கொடுத்தால் உடும்பினையும் தின் பார்கள். அதுபோலவே, கள்ளியிடத்தே பிறக்கும்.அகிலையும், கருமையான காக்கைகரைவதனையும் நன்மையெனவே கொள் வார்கள். அவைபோல, எவர் வாயிடத்துப் பிறந்த நல்லுரை களையும் தள்ளாது ஏற்றுக் கொள்க. அவற்றை ஒருபோதும் இகழவேண்டாம். - . . . - -

கள்ளியகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல் எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத்-தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு. يوم

அகில் கள்ளியிற் பிறப்பினும் மணமுடையது காக்கை கரைவது விருந்து வருமென்பதன் அறிகுறி, அந்தப் பயன் கருதியே அவற்றை அனைவரும் வரவேற்பர். கீழான நாய் கெளவிக் கொணர்ந்ததாயினும் மேலான பார்ப்பாரும் உடும்பின் பயன் கருதி, அதனை வெறுக்காது தின்பர்.ஆகவே, கீழோர் சொல்வன வற்றுள்ளும் நல்லனவற்றை இகழாது கொள்க என்பது கருத்து. ‘நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு’ என்பது. பழமொழி. அக்காலத்தில் பார்ப்பாரும் ஊன்தின்பாராய் இருந்தனர் என்பது இதனால் அறியப்படுகின்றது. ஊனுண்ணா மையை வலியுறுத்தியது சமணமேயாகும். 258 259. தீயோரையும் மன்னித்தல் -

ஒருவரைப் பார்த்ததும், அவரருகே ஒடிச்சொன்று, சினங் கொண்டதாகி,நாய் ஒன்று அவரைக் கவ்வினாலும், அதன்மேற் சினங்கொண்டு மீண்டும் அந்த நாயைக் கடித்தவர்கள் எனச் சொல்லப்படுபவர் யாருமே இல்லை. அவ்வாறே,நற்குணமாகிய தகுதிகள் ஏதும் இல்ல்ாதவர்கள்,தம்முடைய அறிவு நிரம்பாமை காரணமாகத் தம்மைத் துன்புறுத்தி னாலும், அதனால் சினமிக்கவராகத், தாமும் அவரை மீண்டும் வருத்துதல் சான்றோர்களுக்குக்கோட்பாடே அன்று.

நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தந்நலியின், கூர்த்தவரைத் தாநலிதல் கோளன்றால்- சான்றவர்க்குப்