பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

பழமொழி நானூறு மூலமும் உரையும்



கடலுள்துலாம் பண்ணினவர் ೯TTறும் நீரினைத் தட்டாģil பெறுவதுபோல, அவர்களுடைய வாழ்விலும் தட்டாது செல்வம் பெருகிக் கொண்டிருக்கும் என்பது கருத்து. ‘நாளும் கடலுள் துலாம் பண்ணினார்’ என்பது பழமொழி. ஏமம்அரண் பாதுகாப்பு துலாம்-நீர் இறைக்கும் அமைப்பு. 263 264. கல்லாதவன் கண்ட உண்மை -

தாமே கற்றாயினும், அல்லது கற்றவர்களின் வாயிலாகக் கேட்டாயினும் உண்மையுணரும் தகுதி இல்லாதவர்கள், மெய்ப்பொருள்களை ஒருபோதும் தெளிவாக அறியவே மாட் டார்கள். அறிவில்லாத ஒருவன், மெய்ப்பொருள் ஒன்றைப் பெற்றுவிடுதல் நாவல் மரத்தினடியிலே வீழ்ந்து கிடக்கும் பழத்தை ஒருவன் பெற்றாற்போலன்றி,வேறொரு தனிச்சிறப்பும் உடையதாகாது.

கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார் தெற்ற உணரார் பொருள்களை-எற்றேல் அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை; நாவற்கீழ்ப் பெற்ற கனி. - - தானே கனிந்து வீழ்ந்தநாவற்கனிஅவன் எதிர்பாராமல் அவன் முயற்சியின்றியே பெற்றது; அதனை அவன் பெற்ற தனால் அவன் திறமை குறித்தது யாதுமில்லை. அதுபோலவே அவன் கண்ட உண்மைகளையும் கருதி அவனை எவரும் பாராட்டார் என்பது கருத்து. நாவற் கீழ்ப் பெற்ற கனி என்பது பழமொழி. 264 265. சேம்பு கொய்த வாள் -

தம்மைக் காத்துப் போரிடும் ஆற்றல் உடையவர்களைக் கண்டால், அவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பேச்சுப் பேசாமல் பணிந்து விடுவார்கள்; தம்முடன் போர் செய்வதற்கு வலியற்ற வரைப் பார்த்து இரக்கங் கொள்ளாமல், அவர்கள் மீது போர் தொடுப்பார்கள்; இப்படி விளங்கும் தம்மிடத்தே புகழ் இல்லா ஒருவரது படையாண்மையானது, கேலிக்கே உரியதாகும்; நாவிதனின் கத்தி, மயிர் களைதற்கு உரிய கூர்மையுடனில்லாது சேப்பிலையை அறுக்கும் கூர்மையுடன் விளங்கினது போன்றதே, அத்தகையவரின்போராண்மையும் என்று கொள்க. காத்தாற்று கிற்பாரைக் கண்டால் எதிருரையார் பார்த்தாற்றா தாரைப் பரியாது மீதுர்தல் யாத்ததே சில்லார் படையாண்மை, நாவிதன்வாள் சேப்பிலைக்குக் கூர்த்து விடல். -