பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

129



• . அவர்கள் ஆண்மையற்றவர் என்பது கருத்து. 'நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்து விடல் என்பது பழமொழி, அது அதற்குரிய வினைக்குப் பயன்படாது என்பதும் சொல்லப் பெற்றது.இப்படியே அவன் வீரமும் ஆகும். 265 266. பலரிடையே ஒருவனைப்பழித்தல்

பல உறவினர்களும்கூடியிருக்குமிடத்தே ஒருவன் ஆராயா தவனாகி பின் விளைவுகளை நன்கு உணராதவனுமாகி அவருள் ஒருவனைப்பற்றி அவனுடைய வறுமை காரணமாகவேறுபட்ட முறையிலே குறிப்பிட்டுச் சொல்வது கூடாது. அப்படிச் சொன்னால் அது சொற்களுள்ளே வளமையுடைய நல்ல பயனுள்ள சொல்லினைச் சொல்லாதது போலவே பிறரால் கருதப்படும். மேலும் அது நிரையினுள் புகுந்தான் ஒருவன், தனக்குத் தானே துன்பத்தை வேண்டிப் பெற்றது போன்ற அறியாமையான செயலுமாகும். - -

பல்கிளையுள் பார்த்துறான் ஆகி ஒருவனை நல்குரவான் வேறாக நன்குணரான்--சொல்லின் உரையுள் வளவியசொல் சொல்லாததுபோல் நிரையுள்ளே இன்னா வரைவு.

பலரிடையே ஒருவனைப் பழித்தால், பழித்த அவனை அனைவரும் ஒன்றுசேர்ந்து பழித்து அவமானப் படுத்துவர் என்பது கருத்து நிரையுள்ளே இன்னாவரைவு என்பது பழமொழி தனிமையில் எத்துணை திட்டினாலும் கேட்பவன் கூடப் பலர் நடுவேதிட்டப்படும்போதுசினந்து எதிர்ப்பதையும்நினைக்க266 267. கற்றவரின் அடக்கம் - -

பாறைக் கல்லிலே அருவிகள் வீழ்ந்து ஒலி முழங்கிக் கொண்டிருக்கின்ற அழகிய மலைநாடனே கற்கவேண்டிய 'நூல்களைக் கற்று அறிவுடையவரானவர்கள் கண்ட அடக்கமே

உண்மையான அடக்கமாகும் கற்று அறியாதவர்களோ, தங்களு, டைய அறியாமையான தன்மையை மறந்து விட்டுத் தம்மைப் புகழ்ந்து தெளிவாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.நீர்நிறைந்த குடம் தளும்புவதில்லை; குறை குடமே என்றும் தளும்பும் அல்லவா! - - - -

கற்ற்றிந்தார் கண்ட அடக்கம் அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்--தெற்ற அறைகல் அருவி அணிமலை நாட! நிறைகுடம் நீர்தளும்பல் இல்.