பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

131



அனைவரும் ஒழுகிவாழவேண்டும் என்பது கருத்து.'நின்னடை நின்னின்று அறிகிற்பார் இல் என்பது பழமொழி, பாம்பின் கால் பாம்பறியும் என்பதும் இதே கருத்தைக் கூறும். 269 270. மழை வளமும் மன்னன் அவையும் -

எங்கும் நிறைந்து குன்றிடமெங்கணும் பாய்ந்து ஓடி வருகின்ற குளிர்ந்த வெள்ளத்தினது பெருமை எல்லாம், மலையினிடத்தே பெய்த மழையின் சிறப்பினைக்காட்டும் அந்த அளவினதேயாகும். அதுபோலவே பகைவரைக் கொன்று அழிக்கும் சினமுடைய வேந்தனது கல்வியின் பரப்பும் அவன் கட்டுரைத்துப் பேசுகின்ற சிறந்த பேச்சு முறைமையும் எல்லாம் அவனுக்கு அமைந்திருக்கும் அறங் கூறும் அவையின் சிறப்பினையே விளங்கக்காட்டுவதாகும்.

கல்வியகலமும் கட்டுரை வாய்பாடும் கொல்சின வேந்தன் அவைகாட்டும்--மல்கி தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை.

அறங்கூறும் அவையினரால் அமைச்சர்கள் அறிவிற்சிறந்த வராயிருந்தனரென்றால் மன்னனும் சிறந்தவனாகவே புகழ்பெறு வான் என்பது கருத்து. ஆற்றின் வெள்ளவரத்தானது மலையிற் பெய்த மழையைக் காட்டுவது போல என்று இதைக் கொள்ள வேண்டும். நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை’ என்பது பழமொழி 270 271 பிறப்பு அறுக்கும் தன்மை

நின்ற நீரானது வற்றிப் போனதானால்,அதனைச்சார்ந்து வாழ்ந்தனவெல்லாம் வாழவகையற்று அழிந்து கெடும் திரியும், இடிஞ்சிலும், நெய்யும் சார்வாகவே சுடரும் அழகாக எரியும்: அவை இன்றேல் அழிந்துபோம். அது போலவே ஆராயுமி டத்துப் பிறப்புக்குச் சார்வாயுள்ள மற்றையன வெல்லாம் அற்றுப் போகவே, அந்த அற்றுப் போன தன்மை யானது, விரைந்து அவனுடைய பிறப்பினையும் அறுக்கும் சக்தியாகிவிடும் என்று அறிவாயாக

திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக எரியும் சுடரேர் அனைத்தாய்த்-தெரியுங்கால் சார்வற ஓடிப் பிறப்பறுக்கும்; அஃதேபோல் நீரற நீர்ச்சார்வு அறும். -