பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

பழமொழி நானூறு மூலமும் உரையும்



பிறப்பறுத்துப் பேரின்பம் பெற வேண்டுமானால், முதலிலே, பிறப்புக்குக்காரணமான பந்தபாசங்களின் தொடர்பு களை எல்லாம் முற்றவும் அறுத்துவிடுக என்பது கருத்து."நீரற நீர்ச்சார்வு அறும் என்பது பழமொழி. வினைப் பயனால் தொடர்வது பிறவி, வினைகளின் நீங்கப்பிறவியும் அற்றுப்போம் என்பது சொல்லப்பெற்றது. 271 272. நன்றியின் இலாபம்

கரைப் பகுதியிலே எறியும் அலைகள் சென்று உலாவிக் கொண்டிருக்கும் கடற்கரை நாட்டிற்கு உரியவனே தமக்கு நன்மை தருவதாகிய ஒன்று உளதென்று அறிபவர்கள், தமக்கு நாழி அரிசியானாலும் கொடுப்பவர்க்கும் என்றும் உறுதி தருவனவற்றையே நினைப்பார்களாக, அப்படி நினைக்கும் செய்ந்நன்றி அறிதலைப்போலக் கடலிடையே சென்றாலும், ஒன்றுக்கு இரண்டாகப் பயன்தருகின்ற சிறந்த வாணிகம் எதுவுமே இல்லை.

நன்கொன்று அறிபவர் நாழி கொடுப்பவர்க்கு என்றும் உறுதியே சூழ்க எறிதிரை சென்றுலாம் சேர்ப்ப அதுபோல, நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிகம் இல்.

செய்ந்நன்றி மறவாமையே ஒருவனுக்கு வாழ்விலே மிகுந்த நன்மையைத் தருவதான சிறந்த பண்பாகும் என்பது கருத்து. 'நீர்போயும், ஒன்றிரண்டாம் வாணிகம் இல் என்பது பழ மொழி. - * - 272 273. தனியாகப் பிறர் வீட்டினுள் செல்லுதல் - ஒருவன் தீமையாளன் என்று ஊரெல்லாம் பழிமிகுந்து விட்டால், அதனைப் போக்கிக்கொள்ளத் தகுந்த சாட்சி எது வுமே அவனுக்குக் கிடைப்பதற்கு வழியில்லை. வெள்ளம் ஆரவாரத்துடன் மிகுதியாகப் பெருகிவருமானால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு சிறையும் உலகிலே கிடையாது. இப்படியே ஊரிற் பெருகும் பழியையும் தடுக்க முடியாது. அதனால், தூய்மையான மனத்தை உடையவர்கள், தம்தோழரு டைய வீட்டினுள்ளுங்கூடத் தாமே தனியராக ஒரு போதும் செல்லுதல் வேண்டாம். . . -

தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும் தாமே தமியர் புகல்வேண்டா--தீமையோன்