பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

135



முடன்,வாளாகிடவாமல் தன் வாயைத் திறந்து பிறர்ைப் பொல்லாங்கு படப் பேச, அவனுடைய உண்மையான தன்மை

யைப் பிறர் அறிந்து, அவனை ஒறுப்பார்கள் என்பது கருத்து.

'துணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி. 277

278. தானே தனக்கு உதவி! -

நெற்பயிர் செய்ய, அதற்குமுன் அவ்விடத்தே நிரம்பி இருந்தபுல் முழுவதும் அழிந்துபோகும்.அதுபோலவே, ஒருவன் தன்னை வலிமையுடையவனாகச்செய்துகொண்டானென்றால் அவனுடைய நெடுங்காலத்துப் பகைமையும் தானே மறைந்து விடும். ஆதலால், வருவதற்கு எல்லாம் தனித்தனியாகத் தன்னை ஒருவன் வலிமை உடையவனாகச்செய்துகொள்ளவேண்டுமோ

எனில்,வேண்டாம். கற்று அறிந்த சான்றோர்கள் தன்னை வெகு

ளாமல், நன்னெறியில் ஒழுகித் தன்னைக் காத்துக் கொள்வதே

போதுமானதாகும். !

உற்றதற் கெல்லாம் உரஞ்செய்ய வேண்டுமோ? கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும் நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல.நெடும்பகை தற்செய்யத் தானே கெடும். 'அறிவுடையோருக்குச்சினம் உண்டாகாதவாறு ஒழுக்கம் காப்பதே.ஒருவனுக்கு எல்லாவலிமையும்தரும் என்பது கருத்து. "நெடும்பகை தற்செய்யத் தானே கெடும் என்பது பழமொழி. தற்செய்ய தன்னை வலுவாகச் செய்ய புறப்பகையும் கெடும். உட்பகையும் கெடும் என்பது இது. 278 279, இழந்தவன் மனம்!

'கொல்லிப் பாவையென்றே பிறர் கருத்திலே படுமாறு, மிகுதியான அழகுடன் தோன்றும் நல்லவுளே! நீண்ட வேலினைத் தொலைத்தவன், அது மறைந்திருக்க இயலாத குடத்தினுள்ளேயுங் கூட அதனைத் தேடிப் பார்ப்பான். அதனால்,தம்மிடமிருந்து தொலைந்துபோன ஒரு பொருளுக்கு உரியவர்கள், அங்கு இருந்தால் எத்தகைய சிறப்புடையவர் களேயானாலும், ஏன்? தேவர்களேயானாலுங் கூட, அவர்களையும் தம் பொருளைக் கவர்ந்து தமக்குத் தீமை செய்தவராகவே கருதிச் சந்தேகப்படுவார்கள்.

யாவரேயாயினும் இழந்த பொருளுடையார் - தேவரே யாயினும் தீங்கோர்ப்பர்-பாவை