பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

137



பெறுதலை அனைவரும் அடைவது சிறப்பு என்பதுமாம்.'நெய் பெய்த கலனே நெய்பெய்து விடும்’ என்பது பழமொழி, 281 282. துன்பம் செய்யாமை -

தாமரைப்பூவும் தான் ஒப்பாக அமையவில்லையே' என உள்ளம் வருந்தும், அழகிய கண்களை உடையவளே! தேவர் களுக்கும் கைகூடிவராத திண்மையான அன்பினை உடையவர் களுக்கானாலும், நோவச் செய்த காலத்து, அவர் தம் உள்ளத் துத்துன்பமுறாமல் இருப்பதென்பது இல்ல்ையாகும்.அதனால், 'அவர் நாம் செய்பவற்றைப் பொறுப்பார்கள்’ என்று கருதி, எத்தகைய எளிமை உடையவர்களுக்கும், எவ்விதமான பொல்லாத செயலையும் செய்ய வேண்டாம்.

பூவுட்கும் கண்ணாய் பொறுப்பர் எனக் கருதி யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா தேவர்க்கும் கைகூடாத் திண்ணன் பினார்க்கேயும் நோவச்செய் நோயின்மை இல். மிக்க அன்புடையவரே மனம் நொந்துபொறுமை இழந்து விடும்போது, பிறர் பொறுப்பார்கள் என நினைப்பது மதியீனம்; ஆதலின் எவர்க்கும் தீமை செய்தல் கூடாதென்பது கருத்து. 'நோவச்செயல் நோயின்மை இல்’ என்பது பழமொழி, 282 283. விதியாலே வருவன - முன்செய்த புண்ணியப் பயன் உள்ளவர்க்ளுக்குச் சோற்றி னுள்ளும் கறியானது தானாகவே வந்துவிழும். ஆதலால், எல்லாச் செல்வங்களையும் தருவதற்கு வல்ல அரசினையே அடைந்து வாழ்பவர்க்கானாலும், புண்ணியப் பயன் வந்து சேரும் வழி என்பதொன்று இல்லாமல் போனால், அவர் விரும்பினாலுங்கூட, அவர் விருப்பம் கைகூடாமலே போகும். இந்த உண்மையைத் தெரியாதவர்களாக எவரையும் இவர் எளியர் என்று ஒருபோதும் இகழ்தல் வேண்டாம். ஆற்றுந் தகைய அரசடைந்தார்க் காயினும் வீற்று வழியல்லால் வேண்டினும் கைகூடா தேற்றா சிறியர் எனல்வேண்டா, நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி. - - இக்ழப்பட்டவரும் ஊழ்வினை வயத்தால் செல்வராதலும் கூடும்; செல்வமுடைமையும் இல்லாமையும் எல்லாம் ஊழ் வினைப் பயனே என்பது கருத்து நோற்றார்க்குச் சோற்றுள் ளும் வீழும்கறி என்பது பழமொழி. 283