பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

பழமொழி நானூறு மூலமும் உரையும்



கல்லாதும் கேளாதும் கற்றார் அவைநடுவண் சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று--எல்லருவி பாய்வரை நாட! பரிசழிந் தாரோடு -" தேவரும் மாற்றல் இலர்.

கற்றார் அவை நடுவிலிருந்து புல்லறிவாற் பேசும் கயவ ரிடத்தே எதுவும் எதிர்மாற்றம் பேசக்கூடாது; அவர்கள் பண்பற்றவர்கள் என்றே ஒதுக்க வேண்டும் என்பது கருத்து. 'பரிசழிந்தாரோடு தேவரும் மாற்றல் இலர்’ என்பது பழ மொழி. 288 289. இகழ்பவர் அழிவார் -

‘எம்மை இவ்வாறு பழித்துச் சொன்னவர்களின் கொடிய நாவினை அவர் செத்தபிறகு,பருந்துகூடக் கொத்தித்தின்னாது’ என்று, எல்லோருடனும் கோபித்து எழுந்து, செருக்கு உடைய வராக இருப்பவர்கள் அழிவார்கள். தம்முடன் மாறுபட்டால் அப்படி மாறுபட்டவரைத் தாம் செய்ய நினைத்ததை எல்லாம் தப்பாது செய்து முடிக்க வல்லவர்களையும், மனம் கொதிக்கச் செய்து, அவரால் அழிக்கப்பட்டுப் பலியிடும் கல்லின் புறத்தே இட்டபுலியுணவை உண்பவரும் அவர்களே ஆவார்கள்.

உரைத்தவர் நாவோ பருந்தெறியா தென்று சிலைத்தெழுந்து செம்மாப் பவரே--மலைத்தால் இழைத் திகவாதவரைக் கனற்றிப் புலிப்புறத் துண்பார் உணா. - இகழ்ந்து பேசுவதையே தொழிலாகக் கொண்டவர், என்றாவது வலியவர் ஒருவரைச் சினமூட்டி, அதன் காரணமாக அழிவர் என்பது கருத்து. ‘புலிப்புறத்து உண்பார் உணா என்பது பழமொழி. - - 289 290. துறவு கொள்க

என்னுடைய நெஞ்சமே வன்மையான நெஞ்சம் உடைய வர்களின் பின்னாக, அவர் செல்லும் வழியையே மனத்துட் கொண்டுசெல்வாயானால், இன்றே நீயும் அழிவாய் ஆயினாய். மனை வாழ்க்கையைச் சுட்டி, நீயும் இனிமையாகப் பேசி வீணாகச் செய்து ஒழியாதே இருப்பாயாக.அவ்விடத்தேயுள்ள பெண்களும் மக்களும், நின்னை நின்னுடைய நற்கதிக்குப் போகவிடாது தடுக்கின்ற பல தளைகளாவர் என்றறிந்து, அதனைக் கைவிடுவாயாக.