பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

143



உறவினர் கூடக் குடும்பத்து ரகசியம் ஒன்றை ஆராயுமிடத்திலே, உள்ளத்துச் செப்பமில்லாத ஒருவர் இருந்தால், அவரை முதலிலே தந்திரமாக அவ்விடத்தேயிருந்து நீக்கிவிட வேண்டும் என்பது கருத்து. 'பறைக் கண் கடிப்பிடு மாறு’ என்பது பழமொழி. கடிப்பு - குறுந்தடி பறையடித் தலாவது ஊருக்கெல்லாம் அறிவித்தல். 294

295. வாய்ப்பேச்சு உதவியாகுமா? r

அலைகள் கடுமையாகவந்துமோதிச்செல்லும் கடற்கரை யினையுடைய தலைவனே! மழை பெய்தாலல்லாமல் பணி பெய்தலால் குளம் ஒருபோதும் நிறைவதில்லை. அது போலத் தமக்கு இனியவரான ஒருவருக்கு நேர்ந்த துன்பம் தீர்வதற்கான உபாயத்தைக் கொஞ்சமும் வெறுப்பில்லாமல் செய்பவர் ஆனாலும், வெறும் வார்த்தைகளால் மட்டுமே அதனைத் தீர்க்க முடியாது. * , .

இனியாரை உற்ற இடர்தீர உபாயம் முனியார் செயினும் மொழியால் முடியா துளியால் திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப! பனியால் குளநிறைதல் இல், 'வாயுபசாரத்தால் மட்டும் பயனில்லை; பொருளாலும் செயலாலும் உதவவேண்டும் என்பது கருத்து.‘பனியால் குளம் நிறைதல் இல்’ என்பது பழமொழி. - 295 296. காலத்தால் பெறுவது g

இனமாகிய கலைகள் தேனடைகளைக் கிழித்துத் தேன் குடிக்கின்ற ஓங்கிய மலைகள் சூழ்ந்திருக்கும் மலைநாடனே! எத்துணைப் பலவேயானாலும் நெடுங்காலத்துக்குப் பின்னர் பெறுவதைக் காட்டிலும், தினையளவேயானாலும் குறுகிய காலத்திற் பெற்றுக்கொள்ளுதலே நன்மையாகும். பனங் கொட்டையைப் பதித்து அது பனையாக வளர்ந்து அளிக்கும் அதன் பழத்தை எவரும் உண்டவர் இல்லை.

எனைப்பலவே யாயினும் சேய்த்தாற் பெறலின் தினைத்துணையேயாயினும் அணிக்கோடல் நன்றே இனக்கலை தேன்கிழிக்கும் மேகல்சூழ் வெற்ப! பனைப்பதித்து உண்ணார் பழம். காலங்கடந்து வரும் பெரும்பயனைவிடக் காலத்தோடு வரும் சிறு உதவியே சிறந்தது என்பது கருத்து.'பனைப் பதித்து