பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

3



வகையும் அதற்கான முதலீடும் அப்படியே அறநெறிக்கு மாறுபாடில்லாதது. அங்ங்ணமானால், பலதிறப்பட்ட வகை களால் எல்லாம் அறம் செய்வாயாக’ என அவனிடம் சான் றோர் சினந்து கூறவேண்டாம்.அப்படி அவர் கூறினாலும், அது சர்க்கரையிற் பாலின் சுவை மயக்கமடையும் நிலைமையினைப் போன்றதேயாகும். -

தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால், அப்பொருள் தொக்க வகையுந் முதலும் அதுவானால், 'மிக்க வகையால் அறஞ்செய்க' என வெகுடல் அக்காரம் பால்செருக்கும் ஆறு.

பாலிலே சர்க்கரை சேர்த்ததும் இனிப்புச்சுவை கூடி, அது மேலும் விரும்பப்படுவது போல, அத்தகையோனைத் தரும காரியங்களிலே ஈடுபடத் தூண்டுவதனால், அவன் மேலும் சிறப்புே அடைவான். அக்காரம் பால்செருக்கும் ஆறு என் பது பழமொழி. - - 3 4. தளராதவன் செல்வனாவான் *

ஒருவனிடம் உள்ளது அவனுடைய உள்ளுர்க்காரர்கள் மிகச்சிறிய அளவினதே என்று உணர்ந்ததான சிறு முதலே என்றாலும், அதனையும் இகழ்ந்து ஒதுக்காமல் பேணி அவன் தன் தொழிலை முயற்சியுடன் வளர்க்க வேண்டும். விளங்கும் அணிகலன்களை அணிந்தவளே! பழைய ஊரிலேயுள்ள ஆரவாரமிகுந்த கடைத்தெருவிலே மேய்ந்த பழைய கன்றே என்றாலும், அதுவும், பின் ஒரு காலத்திலே வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டல்லவோ?

உள்ளுரவரால் உணர்ந்தாம் முதலெனினும் எள்ளாமை வேண்டும்; இலங்கிழாய்!--தள்ளாது அழுங்கல் முதுபதி அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு. கைமுதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியினால் அதனைப் பெரிதாக்கித், தன்னை இகழ்ந்த ஊரும் மெச்ச வாழ லாம். முயற்சிதான் வேண்டும். அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு என்பது பழமொழி. - 4 5. கொடியவன் பார்க்கமாட்டான்

பெரிய புன்னைமரத்திலுள்ள பூக்களின் நறுமணமானது, புன்மையான புலால் நாற்றத்தினைப் போக்கி விடுகின்ற