பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

பழமொழி நானூறு மூலமும் உரையும்



305. ஒன்றிலே உறுதிகொளல்

பலவாறாகப் பரந்து விளங்கும் சமயத்தார்களுடைய வேறு வேறான கொள்கைகளின்மேல் எல்லாம் மனஞ் செலுத்திப் பல்வேறு வழிகளிலும் ஒடிக்கொண்டிருக்க வேண்டாம். அக்கொள்கைகளுள் எல்லாம் நன்மை நிரம்பிய உண்மையை ஆராய்ந்து அறிந்து அஃது ஒன்றையே மேற் கொள்க. அதுவே எல்லையில்லாத பெருமையைத் தருவதாகும்.பிரம்பூரி என்னும் நெல்லைப் பதத்தாலே விதைத்தால் அது ஒன்றுக்கு ஏழாக விளைவதுபோலவே,அவர் பெருமையும் மிகுதியாகப் பெருகும்

எனலாம்.

பரந்தவர் கொள்கைமேல் பல்லாறும் ஓடார் நிரம்பிய காட்சி நினைந்தறிந்து கொள்க வரம்பில் பெருமை தருமே; பிரம்பூரி என்றும் பதக்கேழ் வரும். மதவெறியில்லாமல், எல்லா மதங்களும் சொல்வன வற்றுள் நன்மையானவற்றை மேற்கொண்டு சிறப்புப் பெறுக என்பது கருத்து.'பிரம்பூரி என்றும் பதக்கேழ் வரும் என்பது பழமொழி. எல்லா மதக் கோட்பாடுகளினும் சிறந்தவற்றை ஆராய்ந்து மேற்கொள்வதே சிறப்பு என்பதாம். 305 306. தீயவனுக்கு நல்லவனும் தீயவனே

நன்மை தீமைக்ளின் கூறுபாட்டை அறியாதவர்கள் சொல்லுகின்ற, உறுதிபயவாத சொற்களை, அவை தீது தருவ தாகும் என்று கருதாதவர்களாக, அதன் வழியே நின்று பயனற்ற காரியங்களையே செய்துவருபவர் கீழ்மக்களாவர். அவர்கள், பெரியோர்கள் சொல்லும் உறுதிப் பொருள்களையும் ஏற்றுக் கொள்ளாமல், தாம் தம்மைக்காத்துக்கொள்ளும்வாய்ப்பையும் இழந்துவிட்டவர்கள், அத்தகையவர் களே, தம் குற்றங்களை உணராது, பிறரைக் கள்ளர்களாகச் சுட்டிப் பழித்துப் பேசு ᏞdᎧJfᎢ&$©ᎥᎢ.

தெரியாதார் சொல்லும் திறனின்மை தீதாப் பரியார், பயனின்மை செய்து பெரியார்சொல் கொள்ளாது, தாம்தம்மைக் காவா தவர், பிறரைக் கள்ளராச் செய்குறு வார். “காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்’ என்றாற் போல, அவன் தீயவனாகவே, அவன் நல்லவரையும் கள்ளர்களாகப்பேசிப்பழிப்பான் என்பது கருத்து.