பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

பழமொழி நானூறு மூலமும் உரையும்



309. பொய்யான தற்புகழ்ச்சி

தாம் செய்த செய்கைகள் சிறிதாயினும், அவை கைகூடி வந்ததென்ற தகுதியும் இல்லாதவர்கள்; அப்படி முடிக்க முடியாதவர் என்ற உண்மையைப் பிறர் உணர்ந்து உதவவும் செய்யாதவர்களாக, அதனால் பயன் அடைந்த நன்மை உடையவர் என்ற தகுதி தோன்ற தம்மைத் தாமே பொய்யாகப் புகழ்ந்து கொள்ளுதல், நகைப்பிற்கே இடமாகும் அது, தன்னால் பிடிக்கப்படாமல் காட்டினிடத்திலேயே இருக்கும் பறவையை, அரைக்கால் பொன்னுக்கு விற்பேன் என்று ஒருவன் பெருமை பேசிக்கொள்வதுபோன்றதாகும். -

செய்த கருமம் சிறிதானும் 6Ꮱ&ön LfᎢ; மெய்யா உணரவும் தாம்படார்-எய்த நலத்தக்கத் தம்மை புகழ்தல், புலத்தகத்துப் புள்ளரைக்கால் விற்பேம் எனல்.

முடியாததை முடியாதென்று சொல்லாமல், முடிப்பவர் போலக் காட்டி முடிக்க முடியாதுபோய்த் தோல்வியுற்ற பின்னும் தாம் முடித்தவரே போலப் பொய்யாகப் பெருமை பேசிக் கொள்ளுதல் கூடாது என்பது கருத்து. ‘புலத்தகத்துப் புள்ளரைக்கால் விற்பேம் எனல்’ என்பது பழமொழி. 309 310. குலத்தளவே குணம் -

இனிமையாகப் பேசுபவளே ஒருவருடைய உள்ளத்தின் தன்மை இன்னபடியென்று அறிய விரும்பும் ஒருவரால், அப்படி அறிந்து தெளியும் திறம் உடைமை உடையதாவது என்றும் அரிதாகும். பறவைகள் தாம் வாழும் புலத்துக்குத் தக்கதான தன்மை உடையனவாயிருக்கும்; அப்படியே எவரும் அவருடைய குலத்துக்குத் தக்கதான தன்மை உடையவராகவேயிருப்பர்.

ஒரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் திறமளிதால், தேமொழி-யாரும் குலக்குல வண்ணத்த ராகுப; ஆங்கே புலப்புல வண்ணத்த புள். ‘குலத்தளவே ஆகும் குணம்’ என்ற ஒளவையின் பொன் மொழியே இங்கும் விளக்கமாகின்றது.சூழ்நிலைக்குத்தக்கவாறு மனிதன் உருவாகின்றான் என்பதை வற்புறுத்துவார்பறவைகள் தாம் வாழும்புலத்திற்கு ஏற்ற தன்மை உடையனவாயிருப்பதைக் கூறினார். ‘புலப்புல வண்ணத்த புள்’ என்பது பழமொழி.