பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

பழமொழி நானூறு மூலமும் உரையும்



விடல் என்பது பழமொழி. பாம்புக்குப் பால் வார்த்தல்' என்பதும் இதைப்போன்ற கருத்து உடையதுதான். 312 313. அரசனைப் பகையார்

தன்மேலே பாய்கின்ற புலியின் எதிராக மானுக்கு ஒரு புகலிடமும் இல்லை. அதுபோலவே, பெருங்காற்றின் எதிராக வைக்கோல் சுமையும் நிலைத்து நிற்றல் இல்லை. ஆகவே, ஆற்றலுடைய வேந்தன் தீமையான கொடிய செயல்களையே செய்தகாலத்திலும் கற்றறிந்தவர்கள், அதற்காக அந்த அரசனை எதிர்த்து, அவன் சினங்கொள்வனவற்றைச் செய்வதைப்பற்றி ஒருபோதும் நினைக்கவே மாட்டார்கள்.

தீயன வல்ல செயினும், திறல்வேந்தன் காய்வன சிந்தியார் கற்றறிந்தார்.--பாயும் புலிமுன்னர் புல்வாய்க்குப் போக்கில்; அதுவே வளிமுன்னர் வைப்பாராம் இல்.

'அரசன் தீய்னவே செய்தாலும், வலியுடைய அவனுக்கு எதிராக எழுந்து அவனுக்குச் சினமுண்டாகுமாறு அறிவுடை யோர் நடந்து கொள்ள மாட்டார்கள்’ என்பது கருத்து. ‘புலிமுன்னர் புல்வாய்க்குப் போக்கில்; அதுவே வளிமுன்னர் வைப்பாராம் இல் என்பன பழமொழிகள். 313 314. தந்ததைத் தந்துவிடல் - *

தமக்கு உள்ள பொருளை ஒருவர் ஒருவரிடத்திலே கொடுத்து வைத்திருந்தால் அப்படிக் கொடுத்துவைக்கப் பெற்றிருப்பவர் அது தம்மிடமே நிலைத்திருக்கும் பொருள் என்று கருதிக் காலங்கடத்தல் வேண்டாம். அவர் அதனை மீட்டுக்கொள்ளவந்த பொழுதிலேயே கொடுத்து விடுக.'கீழான வழியிலே சேர்ந்த பொருள் தங்கி நிலைத் திருப்பதில்லை; விரைவிலே வெளியேறிப் போய்விடும் என்பதையும் அறிக உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தக்கால் கொள்ளும் பொழுதே கொடுக்கத்தாம்--கொள்ளார் நிலைப்பொருள் என்றதனை நீட்டித்தல் வேண்டா புலைப்பொருள் தங்காவெளி.

வைத்திருக்கவென்று பிறர் கொடுத்த பொருளைத்தானே எடுத்துக்கொள்ள நினைப்பவனின் செல்வம் ஒருபோதும் நிலையாது என்பது கருத்து. ‘புலைப்பொருள் தங்காவெளி’ என்பது பழமொழி. - 314