பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பழமொழி நானூறு மூலமும் உரையும்



கடற்றுறைகளை உடையவனே! சிறு பிராணிகளை அடித்துத் தின்னும்போது அவை வருந்தும். அதுகண்டு, தின்னும் பெரிய விலங்குகள் அஞ்சி அவற்றைத் தின்னாது போவதில்லை. அதுபோலவே, எப்போதும் கொடிய செயல்களையே செய்பவ ரான கீழ்த்தரமானவர்கள், தம்மேல் பெரும் பழிச்சொற்கள் ஏறிக்கொண்டேபோவதைக்கண்டாலுங்கூட,அதனைப் பொருட் படுத்தாது, அவற்றிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபடுவார்கள்.

கருந்தொழிலர் ஆய கடையாயார் தம்மேல் பெரும்பழி யேறுவ பேணார்--இரும்புன்னை புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்று அஞ்சாதே தின்பது அழுவதன் கண். கீழ்மக்கள் கீழ்த்தரமான செயல்களைப் பழிக்கு அஞ்சியும் கூடக் கைவிட மாட்டார். 'அஞ்சாதே தின்பது அழுவதன் கண்’ என்பது பழமொழி. - 5 6. தருமம் செய்யுங்கள்

தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட் பிறப்பினைப்பெற்றுள்ளோம்.அதனால்,முடிந்தவகைகளிலே எல்லாம் தரும காரியங்களைச் செய்துவருக கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாதவண்ணம் அஞ்சப்படும்நோய்,முதுமை, அருங்கூற்று ஆகியவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமஞ் செய்யலாமென்று ஒதுக்கிவைத்தால், அந்த வேளையிலே, தருமம் செய்ய இயலா தபடி அறிவுமயக்கமும் வந்துசேர்ந்துவிடலாம். தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால் ஆற்றும் துணையும் அறஞ்செய்க.--மாற்றின்றி அஞ்சும் பிணிமூப்பு அருங்கூற்றுடனியைந்து துஞ்ச வருமே துயக்கு. - யாக்கையின் நிலையாமை கூறினார். தருமத்தை இளமையிலேயே செய்க, பின்னர் பார்த்துக்கொள்ளலாமென் றால்.அதுமுடியாதும்போகலாம்.'அஞ்சும் பிணி, மூப்பு அருங் கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு என்பது பழ மொழி. . + * 6 7. கோழைக்குப் பாதுகாப்பே கிடையாது!

வலிமை உடையவர்களின் துணையுடையவர்கள் என்றா லும், தம் அளவிலே வலிமையில்லாதவருக்கு, வலிமையைப் பெய்து, அவரைப்புகழிலேநிலைபெறுத்துதல் எவராலும் ஆகு