பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

பழமொழி நானூறு மூலமும் உரையும்



தலைக்கொண்ட தங்கருமம் தாமடி கொண்டு கடைப்பிடியில்லாதார் பால்வைத்துக்-கடைப்பிடி மிக்கோடி விட்டுத் திரியின், அதுபெரிது உக்கோடிக் காட்டி விடும். தன் வேலையைத் தானே செய்யாமல், சோம்பலாக இருப்பவனுடைய பொறுப்பிலே விட்டால் அது விரைவிலே கெட்டு அழியும் என்பது கருத்து. பெரிது உக்கு ஒடிக் காட்டி விடும். என்பது பழமொழி. ... - 325 326. மனத் தளர்ச்சி கூடாது

"எம்மிடத்திலோ யாதொரு பொருளும் இல்லை. எமக்கு உதவுவதற்கோ யாரொரு உறவினரும் இல்லை என்றெல்லாம் எண்ணிக் கொண்டு, ஒருவர் தம்மிடத்தே மனத்தளர்ச்சியென் னும் அழிவுக்குக் காரணமாகக் கூடியதாகவரும் செயல்களைச் செய்யாமல் இருப்பாராக. அப்படிச் செய்யா மலிருந்தால், அவர்க்கு ஒருபோதும் துன்பமே இல்லை. எவ்விடத்தும், முன் கைநீட்சியாயிருப்பவர்களுக்குத்தோள்களும் நன்றாகத்திரண்டு பெருத்தே விளங்கும் அல்லவோ?

எங்கண்ஒன்றில்லை எமர்இல்லை என்றொருவர் தங்கண் அழிவுதாம் செய்யற்க--எங்கானும் நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள். १

உள்ளத்திலே தளர்ச்சியை ஏற்படுத்தும் செயல்களை எவரும் செய்ய வேண்டாம் என்பது கருத்து. பெரியவாம், ஆற்றவும் முன் கைநெடியார்க்குத் தோள்’ என்பது பழமொழி. மனத் துணிவு கொண்டவர்களுக்கு எதையும் செய்ய முடியும் என்பதும் ஆம் - 326 327. பெரியவரைச் சார்ந்து பயன் அடைதல்

அழகிய மாலையினை அணிந்த இராமனைத் தனக்குப் படைத்துணையாகக் கொண்டுசென்று இலங்கைக்கு உரிய இராவனேசுவரனுக்கு இளையவனான் விபீஷணன், இலங் கைக்கே மீளவும் சென்று அதற்கு அரசனாகும் பதவியையும் பெற்றனன். ஆதலால், வலிமையில் பெரியவரைச் சார்ந்திருந்து, அதன் சார்பினாலே, பயன் பெறாதவர் என்று எவரும் இல்லை எனலாம்.

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து இலங்கைக் கிறைவற்கு இளையான்-இலங்கைக்கே