பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

159



போந்திறை யாவது உம் பெற்றான், பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல். வலிமை உடையவரைச் சார்ந்து நின்றால், பகையை ஒழித்துத் தம் செயலையும் முடித்துப் பயன் பெறலாம் என்பது கருத்து. பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்’ என்பது பழமொழி. பெரியாரைச் சார்ந்து பயனடையாதவர் இலர்' என்று கூறிப்பெரியார் உறவை பெறக் கூறுவது இது. 327 328. பழிகாரன் பழிக்கு அஞ்சான்

பெரிய உப்பங் கழிகளிலே செருந்தி மரங்கள் தாழ்ந்து விளங்கிக் கொண்டிருக்கும், அலையெறியும் கடலையுடைய குளிர்ந்த நாட்டின் தலைவனே!தம் காலால் உராய்ந்து நடப்பவர் களை, உள்ளடி நோவும்படியாக நெருஞ்சியுங்கூடச் செய்வது ஒன்றுமில்லை. அதுபோலப் பெரும்பழியும் அதற்கு அஞ்சி ஒழுக்கம் பேணாதவர்களுக்கு எவ்வித அவமானத்தையும் தருவ தில்லை. .

உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவ நெருஞ்சியும் செய்வதொன்றில்லை--செருந்தி இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப பெரும்பழியும் பேணாதார்க்கு இல். முள்ளுக்கு அஞ்சாமல் காலை உராய்ந்து நடப்பவர் களுக்கு முள் தைத்தாலும் ஏதும் வருத்தம் செய்வ தில்லை. அதுபோலவே பழிக்கு அஞ்சாத பாதகனுக்குப்பழியெழுவதைப் ப்ற்றியும் கவலையில்லை என்பது கருத்து. பெரும் பழியும் பேணா தார்க்கு இல்’ என்பது பழமொழி, உரிஞ்சி நடத்தல் - காலைத் தேய்த்து நடத்தல், நெருஞ்சி நெருஞ்சி முள் 328 329. பேதைக்கு உணர்வு வராது *

பூத்த காலத்திலும் காய்விடாத பாதிரி முதலாகிய பல மரங்கள் உலகில் உள்ளன. அதுபோலவே வயதால் முதுமை பெற்றாலும் நன்மை தீமைகளைப்பற்றி நன்கு அறியாதவர்களும் உலகில் ஏராளமாக இருக்கிறார்கள். பதர் முதலியனவெல்லாம் போக்கி,பகுதிபண்ணிவிதைத்தாலும் முளையாத வித்துக்களும் இருக்கின்றன. அவ்வாறே பேதைக்கு எவ்வளவு தான் எடுத்தெ டுத்துச்சொன்னாலும் உணர்வு ஒருபோதும் உண்டாகாது.

பூத்தாலும் காயா மரமுள; மூத்தாலும் நன்கறியார் தாமும் நனியுளர்; பாத்தி