பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

163



இல்லாக் கிணற்றில் குதித்தால் மண்டை உடையும், காலும் முடமாகும் என்று அறிந்து விலக்குவதுபோலத் துன்பத்தையும் தெரிந்து விலக்க வேண்டும். - 335 336. தவறான வழியில் நடத்தல்

நமக்கு இவரோடு மாறுபடுதல் ஆகுமோ என்பதைக் கருதாதவராகத், தாமாகவே பெரியார்முன் வலிய எதிரிட்டுச் சென்று, சிறுமையுடையோர், அவரைத் தறுகண்மை செய்து நடத்தல் அப்படி நடந்த சிறுமையாளர்க்கே அழிவைத் தரும். அது, தாம் போகும் வழியறியாத மாக்கள், புலத்தை மயங்க உணர்ந்து,ஊரினுள்ளே பிறர் கண்காணாதவாறு புகுந்து திருட முயன்று,அம்முயற்சியிலே செத்து அழிவதைப்போன்றதாகும்.

ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல், போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாத வாறு. பெரியாருடன் பணிவர்கநடப்பதைவிட்டுமாறுகொண்டு திமிராக நடப்பவர் அழிவெய்துவார்கள் என்பது கருத்து. ‘போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாதவாறு’ என்பது பழமொழி. 336 337. குறிப்பாக அறிதல்

தம்முடைய கண்ணினாலே பார்த்து அறியமுடியாத தம்முடைய உறுப்புக்களைக் கண்ணாடியிலே பார்த்து அறிவார்கள்; அதுபோலவே, ஒருவனுடைய முகத்தை நோக்கி அவனுடைய கருத்தை அறிபவர்கள், அவன் வந்த காரியத்தை அவன் சொல்லும் முன்பாகவே அறிந்துகொள்வார்கள்.அப்படி அறிவதே, மகனறிவை அறியத் தந்தையின் அறிவுத் திறத்தை அறிந்த்துபோன்றதாகும். -

நோக்கி அறிகில்லாத் தம்முறுப்புக் கண்ணாடி நோக்கி அறிப; அதுவேபோல்-நோக்கி முகனறிவார் முன்னம் அறிப; அதுவே மகனறிவு தந்தை அறிவு. - குறிப்பினாலே ஒருவனுடைய தன்மையை உணர வல்லவர்களாதல் வேண்டும் என்பது கருத்து.'மகனறிவு தந்தை அறிவு என்பது பழமொழி. நாலடியாரிலும் செந்நெல்லால் ஆய’ எனத் தொடங்கும் பாடலுள், இந்தப் பழமொழி வந்துள்ளது. 337