பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

173



அணல்-பசுவின் கழுத்துக் கீழ்புறத்திலே தொங்கும் சதை. பெரியோரை அடுத்தவர் அவராலேயே வினைமுடித்துக்கொள் ளுதல் அறிவுடைமையாகும் என்பது கருத்து. "முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று' என்பது பழமொழி. 357 358. தீயவனின் குணம்

ஒலிஎழுப்பும்கண்ணினையுடையமுழவினைப்போல ஒலி செய்து ஆரவாரிக்கும் குளிர்ந்த கடலுக்கு உரிய நாட்டினனே! முன் செய்த தீவினையால் பிறர் வருந்தியதையும் பாராட்டாது, அறவோர் அதன் காரணமாகத் தம்மை தண்டித்தமை கண்டும் திருந்தாது, ஒருவர் அவற்றின் பின்னரும் தாம் மிகவும் விருப்ப முடையவர்போலத் தீய செயல்களையே செய்தல், சாண் அளவா யிருந்ததைக் குறைக்க, அது முழம் அளவிலே, வளர்ந்ததைப் போன்றதாகும். -

உழந்தது.உம் பேணாது ஒறுத்தமை கண்டும் விழைந்தார்போல தீயவை பின்னரும் செய்தல், தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப முழங்குறைப்பச் சாண்நீளு மாறு. தீயோர் பிறருடைய வருத்தத்திற்கும் இரங்கார்; தண்டித் தாலும் திருந்தார்:பின்னும் மிக்க தீமையையே செய்வார்; அவர் உறவு கூடாது என்பது கருத்து, முழங் குறைப்பச் சாண்நீளு மாறு’ என்பது பழமொழி'சாண் ஏற முழம் வழுக்கல்’ என்றும் இது வழங்கும். , 358 359. பழமையும் புதுமையுமான நட்பு - இவர் நமக்கு மிகவும் சிறந்த நட்பினர் என்று கருதி ஒருவருடன் முதலிலே அவருடைய தன்மையைத் தெளிவாக அறியாமல் நட்புக்கொண்டு, தாம்அவர்மேற்கொண்டஅன்பும் அவர் தம்மீது கொள்பவர் இலராகிய நட்பினரைச் சேர்ந்தவர்கள், பழமை என்பதே பற்றாகக் கொண்டு அவரைத் தழுவியிருந்து, புதிய நட்பினைச் சந்தேகித்து நீக்கிவிட மாட்டார்கள்.முழநீளமான போலி நட்பைக் காட்டினும், சாண் நீளமான உள்ளத்து உட்குதலே நன்மை தருவதாகும். தீர்ந்தேம் எனக்கருதி தேற்றாது ஒழுகித்தாம் ஊர்ந்த பரிவும் இலராகிச்--சேர்ந்தார் பழமை கந்தாகப் பரியார் புதுமை முழநட்பிற் சானுட்கு நன்று.