பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

177



செய்யும். அவன் தீய செயல்களைச் செய்ய விரும்பினவனாக நின்றால், அவனை அதனின்றும் விலக்கும். வலிமைபொருந்திய அரசனையும் வருந்துமாறு செய்து, அவனுக்கு உறுதியான நல்ல அறிவுரைகளையே சொல்லு வதனால், அவர்களுடைய சொற்கள் முதலிலே துன்பமாகவே இருக்கும்.

செயல்வேண்டா நல்லன செய்விக்கும் தீய செயல்வேண்டிநிற்பின் விலக்கும்; இகல்வேந்தன் தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால் முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல். மூத்தார் வாய்ச்சொல் முதலிலே துன்பந்தருவதாயினும் இறுதியில் இன்பமாகவே முடியும் என்பது கருத்து. 'முன்னின் னா மூத்தார்வாய்ச் சொல் என்பது பழமொழி. 366 367. புறங்கூறுவார் இயல்பு * , -

எவ்வாறானாலும், உலகத்திலே, மூக்கற்றதான ஒன்றுக்கு வேறு எவ்விதப் பழியுமே கிடையாது. அதுவே பழியாக அமையும். அதுபோலவே, பிறரால் தாம் தாக்கப்படுகின்ற பொழுதிலே, அவருடைய சொந்தக்காரரைப் போல அவரை நன்றாகப் புகழ்ந்து பேசிவிட்டு, அவர் அவ்விடம்விட்டு அகன்ற வுடனே அவரைப் பற்றிப் புறங்கூறிப் பழித்துத் திரிபவர் சிலர். மேன்மைக் குணத்தின்கண் கருத்தற்ற அத்தகையவர்களைப் பழித்தலால் என்ன பயன்? அவர்கள இயல்பே அதுதானே!

தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்குரைத்துப் போக்குற்ற போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண் நோக்கற்ற வரைப் பழித்தலென்? என்னானும் மூக்கற்ற தற்கில் பழி. இழிந்த இயல்பினரான புறங்கூறும் ப்ாவிகளைப் பழித் தாலும், அவர் அதனைக் கேட்டு நாணித் திருந்த மாட்டார் என்பது கருத்து. மூக்கற்றதற்கு இல்லை பழி' என்பது பழமொழி. - . 367 368. சோம்பனை ஏவிய காரியம் முடியாது

கொடிபோன்று துவண்டு வருபவளே! சோம்பேறியாக இருக்கின்ற ஒருவனை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவினால், அவன் அந்தச்செயல்முடியாதவிதமாகவே நடந்துகொள்வான். ஒரு தொழிலைச்செய்வதற்காக ஏவிய உடல்பெருத்த ஒருவனை எப்பொழுதுமே வருத்தி வருத்தித் தொழில் கொள்ளுதல்