பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

பழமொழி நானூறு மூலமும் உரையும்



தற்றுக்கித் தன்துணையும் தூக்கிப் பயன்தூக்கி மற்றவை கொள்வ மதிவல்லார்-அற்றன்றி - யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகி விடும். *

அறிவுடையோர் ஒன்றைச்செய்வதற்குமுன் அதன்பற்பல கூறுபாடுகளையும் தெளிவாக ஆராய்ந்த பின்பே செய்வார்கள் என்பது கருத்து. ‘யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும் என்பது பழமொழி, 372 373. எதிர் நிற்பவரே வீரர் -

கொடிய போர்க்களத்தினுள் வெல்பவர் தாமாயினும் தம் எதிராவாராயினும் அது பற்றிக் கருதாது. எதிர்த்தாரை அடர்த்துத் தள்ளி முனைப்பாக நின்று போர்புரிவார்கள் வீரத் தகுதியை உடையவர்கள். அத்தகைய தன்மையில்லாமல் பாது காப்பினையுடைய கோட்டையினுள்ளே இருந்து கொண்டு பகைவர்மீது சினங்கொண்டவராக மிகவும் வீரம் பேசுதல்,வீரத் தின் தன்மையன்று.அது பகைப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீராகவே முடியும். -

நூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள் தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர்; அஃதன்றிக் காப்பின் அகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல் யாப்பினுள் அட்டிய நீர். -

எதிர்த்துப் போரிடாது கோட்டையினுள் அடைந்து கிடப்பவர் பகைவரின் வலிமையை அதிகமாக்குபவரே என்பது கருத்து. அவர் வீரருமாகார் என்பது முடிவு. யாப்பினுள் அட்டிய நீர் என்பது பழமொழி. 373 374. சொற் சோர்வு இயல்பாகும் / -

மலையினிடத்தே விளங்கும்.அருவிகளையுடைய நாடனே! நல்ல அறநூல்களைக் கற்றவரும் ஆராயாது சில சமயம் சில சொற்களைச் சொல்லுவார்கள். அப்படி யிருப்பவும், நல்ல குடியிற் பிறந்தவர் அல்லாதவரின் இயல்பற்ற தன்மையைக் குறித்து நொந்துகொள்வது எதற்காகவோ? யாவரேயானாலும், சொல்லின்கண்சோர்வுபடாதவரே இல்லை என்று அறிவாயாக

நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர் இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்? கற்பால் இலங்கருவி நாட! மற்றியாரானும் சொற்சோரா தாரோ இல்.