பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

பழமொழி நானூறு மூலமும் உரையும்



கைம் முதலில்லாது எந்தத் தொழிலும் சிறப்புறுவதில்லை என்பது கருத்து வித்தின்றிச் சமபிரதம் இல்’ என்பது பழ மொழி. - * 389 390. அவசரம் கூடாது

மலையகங்கள் பலவற்றையுடைய நாடனே! மனத்து ஒருமைப்பாட்டுடனே கல்ந்து பழகியவரிடத்தும், ஒரு செயலைப்பற்றிச் சொல்வதானால், எடுத்துச்சொல்லும் சொல் மரபினின்றும் சற்றும் வழுவாமல், அவர் அதனால் உவப்பு உடையவராக அதனை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்வதையே மேற்கொள்க. அவசரப்பட்டால், காரியம் கெட்டுவிடும்; அதனால் துன்பமும் வரும்.

புரையக் கலந்தவர் கண்ணும் கருமம் உரையின் வழுவா துவப்பவே கொள்க; வரையக நாட! விரையிற் கருமம் சிதையும்; இடராய் விடும்.

நண்பரிடம் செய்துகொள்ளும் காரியத்தைக்கூட ஆர அமர முறையாகச் செய்து கொள்ளவேண்டும் என்பது கருத்து. "விரையிற் கருமம் சிதையும்; இடராய் விடும்’ என்பது பழ மொழி. . k 390 391. பசப்பு வார்த்தைகள்

தீயதன்மையுடைய செயல்களைச் செய்வதற்குக் கொஞ்ச மேனும் அஞ்சாதவர்களாக, தம்மைக் காத்துப் பேணுபவரைப் போல ஒருவர் சொன்ன பொய்களையும், கோள் பேச்சுக் களையும் நம்பாமல்,அப்படித்தம்மைஏய்ப்பவர்களின் முன்னி லையிலேயே அவர் சொல்லோடு மனம் ஒன்றாதவர்களாகக் கொஞ்சமும் மனத்தளர்ச்சியின்றி, விட்டு ஒழித்து விடுபவரே அறிவுடையவர். அதுவே, வில்லில் இருக்காமல் ஒடிப்போகும் காக்கையின் அறிவுள்ள செயல் போன்றதாகும்.

தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க் காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை--ஏய்ப்பார்முன் சொல்லோ டொருப்படார் சோர்வின்றி மாறுபவே வில்லோடு காக்கையே போன்று.

தீயவர்களின் பசப்பு வார்த்தைகளுக்குச் செவி சாய்க் காமல், அவர் தொடர்பை உடனே அறுத்துவிடுக என்பது கருத்து.'வில்லோடு காக்கையே போன்று’ என்பது பழமொழி.