பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

பழமொழி நானூறு மூலமும் உரையும்



394. வலிய பகையே நல்லது -

கண்களின் தன்மையினைக் கொண்டே நெய்தற்பூக்கள் மலர்ந்திருக்கும். அழகிய கழிகளையுடைய கானற்சோலைகள் விளங்கும், குளிர்ந்த கடல்நாட்டுத் தலைவனே! பருவ மழையே யன்றி வெண்பாட்டமானாலும், அதனால் வெள்ளம். பெருகிவரத் தவறுவதில்லை. ஆதலால், வலிமை உடையவரின் பகையினைக் கொண்டாலும் கொள்ளலாமே அல்லாமல், மேலானவர், வலிமையற்ற கோழைகளின் பகையைக் கொள்ளுதலால் ஒரு பயனும் இல்லை. -

வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயார் புன்பாட் டவர்பகை கோடல் பயமின்றே கண்பாட்ட பூங்கழிக் கானலந் தண்சேர்ப்ப! வெண்பாட்டம் வெள்ளந் தரும். - தகுதியிற் குறைந்தவரிடத்துக்கொள்ளும் பகையும்,நம்மை அவருடைய தகுதி அளவுக்குக்குறைத்துவிடுமாதலால், கூடாது என்பது கருத்து. வெண்பாட்டம் வெள்ளந் தரும் என்பது பழமொழி. 394 395. கீழ்மக்களின் தன்மை - -

பிறரோடு தாம் கொண்ட கலகத்தைத் தணிப்பதற்கான நல்ல கருத்துடனே இடையிலே புகுந்தவர் மேலும், குலத்தாற் சிறுமையுடையவர்கள் வெகுண்டு எழுவார்கள். குதிரையேறி நடத்தும் பழக்கமில்லாதவர்கள், நிலத்திலே ஓடாமல் நிற்கும் குதிரையின் நிலைமையை மாற்ற விரும்பி அதனை அடித்த காலத்து, அது அவனைத் தலைகீழாகக் குப்புறத் தள்ளிவிடும் செயல் போன்றதே அதுவும். - - - குலத்துச் சிறியார் கலாந்தணிப்பான்புக்கு விலக்குவார் மேலும் எழுதல்-நிலத்து நிலையழுங்க வேண்டிப் புடைத்தக்கால் வெண்மாத் தலைக்கீழாக் காதி விடல்.

குதிரை ஏற்றம் அறியாதவன், குதிரையைப் பிறர் அடித்து ஒட்டினபோது தலைக்குப்புற வீழ்வதுபோலவே, கீழ்மகன் தன் கீழ்மைக்குண்த்தால், தனக்குநன்மை செய்பவனையும் பகைத்துக் கொள்வான் என்பது கருத்து.'வெண்மாத்தலைக்கீழாக் காதி விடல்’ என்பது பழமொழி. ; 395