பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பழமொழி நானூறு மூலமும் உரையும்



ஈடுபடும் செயலானது குறைபாடுடையதாக இருப்பதான அதன் தன்மையை அறியாதவன்.அதனைச் செய்யப்புகுந்தால், செயல் முற்றுப்பெறாது அழிவடைதலும் உண்மையாகும்.

உழைஇருந்து, நுண்ணிய கூறிக், கருமம் புரையிருந்த வாறறியான், புக்கான் விளிதல், நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டு, கரையிருந் தார்க்கெளிய போர். செயலின் உண்மையான நிலையறியாமல் ஈடுபடுவது அழிவைத் தரும்."அரங்கினுள் வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர்’ என்பது பழமொழி. 17 18. பகையை அறவே ஒழிக்க வேண்டும்

தம்முடன் மனம் ஒத்துப்போகாதவர்களுடன் போரிட்டு வெற்றிபெற்ற இடத்தும், அதனாலும் மனம் அமைதியடைந்து இருந்துவிடக்கூடாது. அப்படி இருக்காதவர்களாக, அவர்கள் இறந்துபோக வேண்டும் என்னும் அளவிற்குச் சினங்கொள்ளு தலே மன்னரின் இயல்பு:அருவிகள் பரந்து வீழ்கின்ற மலைகளுக் குரிய வெற்பனே! அதுதான், கதிர் அரிந்து வைத்த அரிதாளையும் விடாமல் உழுது, நீருள் அமிழ்த்தி அழுகச் செய்வது போன்ற அறிவுடைய செயலாகும். -

பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும் இருந்தமையாராகி, இறப்ப வெகுடல் விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே அரிந்தரிகால் நீர்படுக்கு மாறு. தாளை விட்டுவைத்தால் பின்னர் அதனடியினின்றும் வளமற்ற பயிர் கிளைக்குமாதலால், உழவர் அதனை அழித்து அழுகச் செய்வார்கள். அதுபோலப் பகையையும் வேரறக் களைவது ஒரு நாட்டுத் தலைவனின் பொறுப்பு. அரைகுறையாக விட்டு வைத்தால் மீண்டும் ஆபத்துதான். 'அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு’ என்பது பழமொழி. 18 19. மூடர்களின் உறவு கூடவே கூடாது -

பரந்து ஒலிக்கும் அலைகளின் மிகுதியையுடைய கடற்கரைகளுக்கு உரிய சேர்ப்பனே! நெல் அரிபவர்களுக்கு அவ்வேலையானது கெடும்படியாக எவரும் நரியைக் காட்ட மாட்டார்கள். அதுபோலவே, அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து அதன்பால் நிலைபெற்றிருப்பவர்கள், நுண்