பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

பழமொழி நானூறு மூலமும் உரையும்



நெறிமடற் பூந்தழை நீடுநீர்ச் சேர்ப்ப! அறிமடமும் சான்றோர்க்கு அணி. 'பாரியும் பேகனும், முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் அளித்தனர் என்று புலவர்கள் போற்றுவர்.அவை கொடுத்தற்கு உரியன அன்றென அறிந்தும் அறியாதார் போல அவர்கள் கொடுத்தலால் அவர்கள் சிறப்படைந்தனர், சான்றோர் பெருமை இதனால் கூறப்பட்டது. 'அறிமடமும் சான்றோர்க்கு அணி என்பது பழமொழி அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பே தருவதும் சொல்லப்பெற்றது. - 25 26. பெரியவர் பெரியவற்றை அறிவார்கள்

நல்லனவற்றையும் பொல்லாதனவற்றையும், அருகே நெருங்கி யிருப்பவர் தம் சொற்களைப் பெய்து அறிவுடையோ ருக்கு அறியச் செய்தலும் வேண்டுமோ? வில் போன்ற புருவத்தின் கீழே செவ்வரி படர்ந்திருக்கின்றன. பரந்து அகன்ற கண்களை உடையவளே! பெரிய செயல்களை முதன்மையுடையவனாக இருந்து ஆட்சி செய்து நடத்தும் ஒருவனே, பெருமையுடைய சிறந்த செயல்களின் தன்மையையும் அறிபவனாயிருப்பான் என்று அறிவாயாக

பொற்பவும் பொல்லாதனவும், புணர்ந்திருந்தார் சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?--விற்கீழ் அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும். பெரிதாள் பவனே பெரிது.

அறிவுடையோர் சிறந்த செயல்களையே செய்ய விரும்புவர்; அதனால், அவரே அதனை அறிந்து செய்பவராவர்; அவர்க்கு எவரும் அதனைச்சொல்லுதல் வேண்டாம்,'அறியும், பெரிதாள்பவனே பெரிது’ என்பது பழமொழி. 26 27. பேதை எதையும் செய்ய மாட்டான்

தனக்குவந்துநேருகின்றதுன்பங்கள் பலவற்றையும் இன்ன வகையால் அவை வந்தனவென அறியாதிருக்கின்ற அறியாமை யையே தன் வாழ்விற்குப் பற்றுக்கோடாகக் கொண்டிருப்பவன் பேதையாவான். அவன், என்றும் அதனை வெல்லும் வெற்றியு டையவன் ஆகவே மாட்டான். வெற்றி பெறல் என்பது, ஊழ் வினைப் பயனால் வந்து வாய்த்த வழியேயல்லாமல், ஒருவனின் தன் முயற்சினாலே மட்டும் அடையக்கூடியதன்று என்று நினைத்து, அந்த அறிவினால் உண்டாகும் அச்சமே, அந்தப் பேதைக்கு அதிகமாயிருக்கும்.