பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

19



சிறந்த வலிமையாகும் என்று சொல்லப்பட்டது. ஆயிரம் காக்கைக்கு ஒர் கல்’ என்பது பழமொழி. இப்படியே அவனு டைய பகையும் அஞ்சி கலைந்து போம். 35 36. ஆராய்ந்த பின் நம்புங்கள் -

தமக்கு அன்பு உடையவர்களாக விளங்குபவர்களிடத்தி னும், அவர்களை முழுவதும் ஆராயாதவனாகி நம்பிக்கை கொண்டவன், உறுதியாகக்கெட்டேபோவான்.அப்படியிருக்க, ‘எப்பொழுதும் வெகுண்டவர்களைப்போல மனம் வேறு பட்டவர்களாகி நிற்கும் ஈரமற்றவர்களை நம்ப வேண்டாம்' என்று, கொஞ்சம் சொல்லவேண்டாம் அல்லவோ? விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும் முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா, அளிந்தார்கண் ஆயினும், ஆராயா னாகித் - தெளிந்தான் விளிந்து விடும். ‘விளிந்து விடும்’- விரைந்து கெடும் என்பதும் பாடம் முளிதல்-காய்தல்,தஞ்சம்-எளிமை.அன்புடையவர்களாகவோ அன்பற்றவர்களாகவோ விளங்கினாலும், எவரையும் ஆராய்ந்தே நண்பராகக் கொள்ளல் வேண்டும். ஆராயா னாகித் தெளிந் தான் விளிந்து விடும்’ என்பது பழமொழி. 36 37. ஏவியது செய்யாத ஊழியர் -

"எம்மவராதலாலே நீவிர் இக்காரியத்தை எமக்குச் செய்து தருவீராக’ என்று,வேந்தன், தன்னுடைய சுற்றத்தார்களை நம்பி, நியமித்த இடத்து, அக் காரியத்தைச் செய்வதற்கு ஏற்றுக் கொண்ட அச்சுற்றத்தினர், அம்மன்னனுக்காக வேல் முனையி லேயாயினும் வீழ்ந்து அதனை எப்படியாயினும் நிறைவேற்ற வேண்டும். அப்படி அல்லாமல் அந்தக் காரியத்தை வேண்டா மென மறுத்துச் சொல்வார்களானால், 'ஆல்' என்று சொல்லப் 'பூல் என்று மறுத்துச்சொல்வதுபோன்றதே அதுவாகும்.

எமரிது செய்க எமக்கென்று வேந்தன் தமரைத் தலைவைத்த காலைத்-தமரவற்கு வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின் ஆல்என்னிற் பூல்என்னு மாறு. 'ஆல்' பெரிது; பூல் பெரிது பெரியதைச் சொல்ல அதனை மறுத்துச் சிறியதை உரைப்பவர் தகுதியற்றவர். அரசச் சுற்றத்தார் தம் உயிர் கொடுத்தாயினும் அரசனின் கட்டளையை