பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

பழமொழி நானூறு மூலமும் உரையும்



42. அறத்தைப் பாதியிலே நிறுத்தக்கூடாது.

நல்லறம் செய்வதற்குப் பொருந்திய வகையினாலே, செய்யக்கருதிய நல்லறத்தைப் பலரும் வருத்தமடையாமல் ஒரு கட்டுக்கோப்புஉடையதாகவே செய்துவருவானாக இடையில், அது இடையூறு உடையதாகி, அதனால் இடையிலே நிறுத்தி ஒழித லைவிடப், பயிரை நட்டுவிட்டுக் காத்து விளையவைத்து அறுத் துப் பயன்பெறாமற் போயின வனாதலைவிட நடாமலிருப்பவனாயிருத்தலே நல்லதாகும்.

பட்ட வகையால் பலரும் வருந்தாமல் கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம் முட்டுடைத் தாகி இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று. அறம் செய்பவர், குறுக்கிடும் இடர்ப்பாடுகளைக் கருதி, இடையிலே அதனை நிறுத்தி விடுதல் கூடாது. தொடங்கியதை முற்றவும் செய்து பயன்பெறுதல் வேண்டும். இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று என்பது பழமொழி 42 43. பகைவரின் துணைவரை நட்பாக்கிக் கொள்க -

“யானும், இவ்விடத்திலே துணையாகப் பகைவருடன் இருந்த என் தமையனும் ஒன்று சேர்ந்துவிட்ட காலத்திலே, பகைவருடைய வீரம் எல்லாம் செல்வதற்கு இடம் எதுவும் இல்லை"இப்படிச்சொல்லி அவரும் தம்முடனே கூடிப்படைத் துணையாகி நின்று பகைவருடன் மாறுகொள்ளு மாறு, பகை வரிடமிருந்து அவரைப்பிரிந்து விடத்துண்டுதல் சிறந்ததாகும். அதுதான், இடையரின் நாய்க்கு ஆடு திருடும் கள்ளர்கள் எலும்பினை இடுதலோடு ஒக்கும். -

யானுமற் றிவ்விருந்த எம்முனும் ஆயக்கால் வீரஞ் செயக்கிடந்த தில்லென்று--கூடப் படைமாறு கொள்ளப் பகைதுண்டல் அஃதே இடைநாயிற் கென்பிடு மாறு. பகைவர் இருவராகிய இடத்து, அவருள் ஒருவரை உற வாடிப் பிரித்துத் தம்மவராக்கிக் கொள்ளல் சிறப்புடையது. 'இடை நாயிற்கு' கிடை நாயிற்கு என்றும் பாடம் இடை நாயிற்கு என்பு இடுமாறு’ என்பது பழமொழி என்புபெற்றநாய் கள்ளற்குச் சாதகமாவது போலப் பகைவர்க்குத் துணையாக வந்தாரும் மாறிவிடுவர் என்பதாம். - 43