பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பழமொழி நானூறு மூலமும் உரையும்



46. வாழ்விலே உறுதி வேண்டும்.

இல்லற வாழ்க்கையானாலும் அஃதில்லாத துறவற வாழ்க்கையானாலும் தாம் உறுதியாக இரண்டிலொன்றை மேற்கொண்டு ஒருவர் ஒழுகலாம். அப்படி ஒழுகாதவராகிச் சிறந்த வாழ்நாள் வீணாகக் கழிந்துபோக நடுவே எதனிலும் செல்லாமல் தடைப்பட்டு நின்று, எல்லாவற்றையும் ஆழ்ந்து, உறுதியாகத் துணிந்து ஒரு வழியாலே நடக்காதவர்கள் வாழ்வைப் பயனின்றிக் கழித்தவர்கள் அவர்களே காவின் இருபக்கத்திலுள்ள பொருள்களையும் நீக்கிவிட்டுத்தண்டினை மட்டுமே சுமந்து செல்பவர்களுக்குச்சமானமாவார்கள்.

இல்வாழ்க்கையானும் இலதானும் மேற்கொள்ளார் நல்வாழ்க்கை போக நடுநின்று--எல்லாம் ஒருதலையாச் சென்று துணியா தவரே இருதலையும் காக்கழித் தார். இரு வகை வாழ்க்கையினும் எதன்பாலும் முறையே ஈடுபட்டு நிலைத்து வாழாது வாழ்நாட்களைக் கழிப்பவர், பயனற்று வாழ்ந்தவராவார். 'இருதலையும் காக்கழித் தார்’ என்பது பழமொழி. இருபக்கமும் சுமையைத் தொங்கவிட்டு எடுத்துச் செல்ல உதவுவது காவடித்தண்டு சுமைகளை அகற்றி விட்ட வெறுந்தண்டைச் சுமந்து போவது நகைப்பிற்கே இடமாகும். 46 47. போலி நண்பர்கள் கேடு செய்வார்கள்

தம்மிடத்திலே மிகுதியாக நட்புப் பூண்டவர்களுக்கும், அவர்களுடைய பகைவர்களுக்கும் இடையே சென்று, இருவரி . டத்தும் மன வேறுபாடு இல்லாமல் மிகவும் நட்புடையவர்கள் போலவே பேசிப் பழகி, அவர்களுள் ஒருவருடனும் மனம் ஒருமைப்பட்டுவிளங்காதவர் மிகவும் கெட்டவர்கள்.அவர்களே இருதலைக் கொள்ளி என்று சொல்லப்படுபவராவர்.

பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள் ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே o இருதலைக் கொள்ளியென் பார். - இருவரது பகைமையும் வளர, இருவராலும் இவருக்கும் கேடேவிளைதலால்,'இருதலைக்கொள்ளி போன்றவராயினர் அவர் என்க. 'இருதலைக் கொள்ளி என்பார்’ என்பது பழ மொழி, சமாதானம் செய்யமுயல்பவர் இருவருக்கும் பகையாத லும் கூடும் என்பது கருத்து. 47