பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

27



52. பிழைக்கும் பொறி இருப்பவனுக்கு ஆபத்தே இல்லை

ஆரவாரமாகப் பேசுகின்றாரே என்று துணைவராகக் கொள்ளப்பட்டவர்கள் அந்த எண்ணமானது பழுதுபட்டுப் போக, அந்தப்பிணிப்பினின்றுதப்பிஎழுந்துபோனாலும்போய் விடுவார்கள். ஆனால், அரக்கு மாளிகையினுள் இடப் பட்ட ஐவராகிய பாண்டவர்களும் இறந்துவிடாமல் தப்பிப் போய் விட்டார்கள் அல்லவோ அதனால் பிழைக்கும் பொறி உள்ள உயிருக்குப் பிழைக்க முடியாத ஆபத்தான இடம் என்பது எதுவும் இல்லை என்று அறிக - -

குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப் புரைத்தெழுந்து போகினும் போவார்--அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் இல்லையே உய்வதற்கு உய்யா இடம்.

• நண்பர்கள் கைவிட்டாலும், நல்ல ஊழ் இருந்தால் அவருக்கு எவ்விதமான ஆபத்தும் வராது. ‘இல்லையே உய்வதற்கு உய்யா இடம் என்பது பழமொழி. 52

53. உதவாதது எதுவுமே இல்லை , &

வானகத்திலே தோய்ந்திருப்பனபோல விளங்கும் உயரமான குன்றுகள் பரந்து கிடக்கும் நாட்டுக்கு உரியவனே! ஒருவர் மற்றொருவரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல் நன்மையேயாகும். பாம்பினால் வரவிருந்த ஒரு துன்பத்தை பார்ப்பான்பக்கத்திலே இருந்த நண்டுங்கூடநீக்கியது.அதனால், சொல்லப்போகுமிடத்து, ஒன்றுக்கும் உதவாத பொருள் என, இவ்வுலகில் ஒன்றுமே இல்லை.

நன்றே ஒருவர்த் துணையுடைமை ப்ாப்பிடுக்கண் நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான்--

விண்டோயும் குன்றகல நன்னாட! கூறுங்கால் இல்லையே ஒன்றுக் குதவாத ஒன்று. பார்ப்பான் ஒருவன் தன் தாயின் ஆணைப்படிநண்டைத் துணையாகக்கொண்டுசெல்ல,அது அவனைக்கடிக்கவந்த பாம் பினைத்தன் கொடுக்கால் இறுக்கிப்பிடித்துக்காத்தது என்பது கதை.இதனால் எத்தகைய நண்பராலும் சமயத்திற்கு அவராலும் உதவி கிடைக்கும் என்பது கூறப்பட்டது. இல்லையே ஒன்றுக் குதவாத ஒன்று’ என்பது பழமொழி. சிறு துரும்பும் பற்குத்த உதவும் என்பதும் இதே கருத்தைக் கூறுவது. S3