பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

35



நட்புச் செய்வதற்கு முன்னர்,தகுதி உடையவரை நாடியே நட்புச் செய்தல் வேண்டும். இன்னாதே பேஎயோ டானும் பிரிவு’ என்பது பழமொழி. இதை நினைக்க வேண்டும். 68 69. கெட்டாலும் பெரியோர் பெரியோரே

மேல்மாட்ங்களையுடையபெரியவீடானது அழிந்தவிடத் தும்,அதிலுள்ள மரங்கள் மீண்டும் கட்டுவதற்கான ஒரு கூடத்திற் காவது பயன்படும்; அதுப்ோலவே பெரியோர்கள், செல்வம்' இல்லாத இடத்தும், தம்முடைய பெருந்தன்மையினின் றும் குறைபாடுறவே மாட்டார்கள்.அதனால் இணையில்லாத சிறப்புடைய ஒன்றுக்கு என்றுமே அழிவில்லை என்று அறிதல் வேண்டும்.

மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர் கூடம் மரத்திற்குத் துப்பாகும்--அஃதேபோல் பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர் ஈடில் லதற்கில்லை பாடு. ?

பெரியோர்,தம் வலிமையாலும் செழுமையாலும் குறைந்த காலத்தினும் பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவுவார்கள். சிறி யோர் அங்ங்னம் உதவார். ஆதலின் அவர் தொடர்பைக் கைவிடுக. ஈடில்லதற்கில்லை பாடு’ என்பது பழமொழி. 69 70. எப்போதும் பொறுக்க முடியாது

இனிதாக இசைத்தல் பொருந்திய யாழின் இனிய ஒலியைப்போல, வண்டினம் ஆரவாரிக்கும் நீர்வளமுடைய ஊரனே! வாழை மரங்கள் இருமுறை எப்போதாவது குலை ஈனுமோ? ஈனாது. அது போலவே முன்னம் ஒருமுறை பிழை செய்தவனையே, அவனே பின்னரும் மிகுதியாகப் பிழை செய்த காலத்தில் எவராவது பொறுப்பார்களோ?

முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும் பின்னும் பிழைப்பப் பொறுப்பவே?--இன்னிசை யாழின்வண்டார்க்கும் புனலூர! ஈனுமோ வாழை இருகால் குலை? சான்றோர், பிறர் செய்த குற்றங்களைப் பொறுப்பார்கள் என்றாலும்,அவர் பொறுமைக்கும்ஒர் எல்லையுண்டு.இதனால், சான்றோர் பொறுப்பார்க்ள் எனக் கீழ்த்தரமானவர் அவர் களுக்குத்தொடர்ந்து தீமை செய்யமுனைதல் கூடாதென்பதும் பெறப்படும். 'ஈனுமோ வாழை இருகால் குலை' என்பது பழமொழி. . 70