பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பழமொழி நானூறு மூலமும் உரையும்



தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத் தீமாற்றத் தாலே பகைப்படுத்திட்டு--ஏமாப்ப முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே

உண்ஓட் டகலுடைப் பார்.

தன் திறமையில்லாத ஒருவன், பிறர் துணையாலும் ஒரு காரியத்தை முடிக்கச் சக்தியற்றவனாகவே இருப்பான். 'உண் ஒட்டு அகல் உடைப் பார்’ என்பது பழமொழி. 75 76. பயனற்றவனின் உறவே வேண்டாம் -

அருவிகள், விட்டுவிட்டு ஒளிசெய்து பொன்னைக் கொழித்து வீழ்ந்து கொண்டிருக்கின்ற, தன்மையான மலை நாட்டிற்கு உரியவனே! தம்மை வந்து புகலாக அடைந்தவர் களுக்கு உற்ற ஒரு துயரத்தைத் தமக்கு வந்து சேர்ந்ததாகவே கொண்டு, எமக்குத் துன்பம் வந்துற்றது என்று உணராது அவரைக் கைவிட்டால், அதனை என்னென்று சொல்வது? 'உமியைக் குற்றுதலாலே கை வருந்துவது போன்ற செயல்’ என்றுதான் கூறவேண்டும்.

தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க்கு உற்றது எமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம் இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட! உமிக்குற்றுக் கை வருந்து மாறு. -

சுற்றத்தாருள் யாருக்காவது துன்பம் வந்த காலத்திலே உதவாத ஒருவன் பயனற்றவன்; அவனைச் சுற்றத்தான் எனக் கருதி நாடிச் செல்லுதல், உமிக்குற்றி கை நோகிறதே என்பது போன்ற வீண் செயலேயாகும். உமிக்குற்றுக் கை வருந்து மாறு’ என்பது பழமொழி. 76 77. இரண்டறக் கலப்பதே நட்பு

உளம்பொருந்திய காதலுடைய உமையவளைத் தன்னிலே ஒரு கூறாக அமையுமாறு தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக் கொடியைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும் கொண்டிருக் கிறான். தம்மை நட்புச் செய்தவர்களைச் சேர்ந்த பொழுதிலே, அவரை விட்டு அவ்விடத்தே கொஞ்சமேனும் அகலாமல், முழு உடம்பும் பொருந்தக் கலந்து விடுபவர்களே சிறந்த நண்பர்கள் ஆவர். - + - -

ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே