பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

பழமொழி நானூறு மூலமும் உரையும்



வெஞ்சின மன்னவன் வேண்டாத வேசெயினும் நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா என்செய்து அகப்பட்டக் கண்ணும், எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில்?

புலியைத் துயில் எழுப்பினால், அவர்களே அழிவார்கள். அதுபோல, அரசன் மீது அவர்களும் பகைத்து அவன் கோபத் தைக் கிளறிவிட்டால்,அவர்களே அழிய நேரும் என்பது கருத்து. "எழுப்புபவோ,துஞ்சு புலியைத்துயில் என்பது பழமொழி.100 101. எளியாரை இகழாதவர் இல்லை

புகழ் பொருந்திய பிற மன்னர்களை வென்று அவர்களுக்கு மேற்பட்டவர்களாக நடந்துவருவது அல்லாமல், மதயானை களைக் கொண்ட மன்னவர்களுக்கு, அவர்களைக் கைகடந்து தம்மேற் செல்லுமாறு விடுதல், தமக்கே இறுதியில் துன்பமாக முடியும். மழைத்துளியை உண்ணும் பறவையான வானம்பாடி யைப் போல், செவ்வையானவற்றையே உணர் பவர்களினும், எளியவர்களை இகழாதவர் உலகில் இல்லையாகும்.

ஒளியாரை மீதுர்ந்து ஒழுகுவது அல்லால் களியானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம் துளியுண் பறவைபோல் செவ்வனோர்ப் பாரும் எளியாரை எள்ளாதார் இல்.

போர் வலியற்ற அரசன் மிக நல்லவனானாலும் மதிக்கப்பட மாட்டான் என்பது கருத்து. 'எளியாரை எள்ளா தார் இல் என்பது பழமொழி.நல்லவனாக இருப்பதுபோதாது; வல்லவனாகவும் இருந்தால்தான் பிறர் மதிப்பார் என் பது கருத்தாகும். . 101 102. மனநலமே நலம்!

ஆறுகள் மிகுதியான வெள்ளப் பெருக்குடன் வந்து மிகுதியான நல்ல தண்ணீரே பாய்ந்த காலத்தினும், ஒலிக்கும் கடலானது உப்புத் தன்மையினின்றும் நீங்குதலைப் பெற மாட்டாது. அதுபோலவே, மிகுதியான இனத்தின் நன்மைகள் நன்றாக உடையவர்களானாலும், எக்காலத்துங் கீழ்மையான புத்தியுடையவர்கள், நல்ல மனம் உடையவர் ஆகவே மாட்

L_ss soon. - - -

மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும் உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல்--மிக்க