பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

53



ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன்-ஆற்றவும் போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன்று ஏறாய் விடும். ஒப்புரவு - உயர்ந்தோர் மேற்கொண்ட நெறிப்படி நடத் தலும் ஆகும். குடிப்பிறப்பின் சிறப்பு ஒருபோதும் ஒருவனை விட்டு மாறாது என்பது கருத்து.'ஏற்றுக்கன்று ஏறாய் விடும் என்பது பழமொழி. - - 106 107. பகைவரை வீட்டிற்கு அழைத்தல்

போவதற்குத் தகுந்த வழியிடையிலும், பெற்றோர் பின் னாகச் செல்ல முடியாது, ஒக்கலிலேயே செல்லும் குழந்தைகள், பெரிய காட்டினிடத்தே செல்லும் பெற்றோர் தம்மை இடுப்பிலே எடுத்துச் செல்லவேண்டும் என விரும்பி அழுதனர் என்றால், பெற்றோர் அதற்கு ஒருபோதும் இசைவதில்லை. ஏனென்றால், அது பெரிதும் துன்பம் தருவது என்பதனை அவரே அறிவார். அதுபோலவே, தம்முகத்தை வெளியிலே கண்டாலும் பொறுக்காத பகையுடையார் ஒருவரை'வீட்டிற்குப் போகலாம் என்று அழைத்து வேண்டும் ஆசையும் பொருத்தமற்ற ஆசையேயாகும். -

முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை அகம்புகுதும் என்றிரக்கும் ஆசை, இருங்கடத்துத் தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார் ஒக்கலை வேண்டி அழல்.

தம்மை மதியாத ஒருவரைத்தாம் ஒதுக்கிவிடுதலே சிறப்பு. அவரோடு நாம் உறவாடினால் நமக்குத் தான் கேடு வரும் என்பது கருத்து."ஒக்கலை வேண்டி அழல்'என்பது பழமொழி. நடக்கும் சக்தியிருந்தும் ஒக்கலை வேண்டி அழும் பிடிவாதத்திற்கு இசைவது கூடாது என்பதாம். 107

108. பாதி அழிந்தால் பகை தீராது

உள்ளத்துள் கபடமில்லாமல் இனிதாகப்பேசுதல்; மாண்பு டைய பொருள்களைக் கொடுத்தல்; சூழ்ச்சிபொருந்திய வஞ்சக மான முறைகளால் தமக்கு எளியராக ஆக்கித் தம் வசப்படுத்திக் கொள்ளுதல்; முறைமையாலே முன்னர் அவரைப் பகைத்துக் கெட்டவர்க்கு நடுநிலையாகச் சென்று அவரை நன்றாக அழித்தல் ஆகியவற்றால் அல்லாமல், ஒடித்து எறிவதனால் மட்டுமே, பகைமை முற்றவும் தீர்ந்துவிடாது.